பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்நிலத்தில் மலர்ச்செடியில் உராயுங்கால் குளிர்மணத்தை வீசும் காற்று; வெளியிடத்திற் சுடுநிலத்தில் வரும்பொழுது வெப்பத்தை வீசிச் செல்லும்; * அளியகத்தே மிகுசான்ருேர்ச் சார்பவரும் அறநெறியர் ஆவர்; தீமை கெளிமனத்தர் தமைச்சார்வோர் இவ்வுலகில் நேர்மையிலா வழியே சார்வர் 4. பருவஎழில் மலர்ந்துள்ள பெண்ணுெருத்தி பதியின்பால் புலந்து கண்ணிர் பெருகஉதிர்த் தசையாமல் நிற்பதுபோல் பெருந்துணர்ப்பூஞ் செடிகள் எல்லாம் மருமலர்கண் ணிர்சிக்தித் தலைசாய்த்து மணமின்றி கிற்கும், பின்னர் அருகனையும் கணவன்வந் தவளிதழை அசைக்கின்ற போழ்து மங்கை, 5 இதழ்விரித்து நகைகாட்டல் எனத்தென்றல் இனிதாகச் செடிகள் மீது மெதுவாகத் தடவ இதழ் விரித்தரும்புப் பல்காட்டும்; மேலும் வண்டு பதம்டாடச் செடிகொடிகள் நடமாடப் பரிந்தவற்றை மணக்கும் தென்றல்; இது பிறந்த மலேஎங்கள் தமிழகமே எனும்போது சிலிர்க்கும் உள்ளம் 36