பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்று அறுசீர் விருத்தம் I இரவலர்கள் எவரேனும் வருவாரோ என்றஞ்சிக் கதவ டைக்கும் புரவலர்கள் சாளரத்துக் கதவுதனைப் பூட்டாது திறந்து வைத்து வரவுரைகள் கூறுகின்ருர் காற்றுக்கு: வரவிலேயேல் பணத்தை விசி இரவுபகல் மின்விசிறி கொண்டவர்கள் எப்பொழுதும் சுழற்று கின்ருர் 2 செலவழித்துப் பெற்ருலும் இயற்கைமணம் சேர்காற்றைப் பெற்றிட் டாலும் இலவளித்த பஞ்சணையார் மென்காற்றில் இழைந்திருக்கும் சுகத்தை எள்ளின் அலகனைத்தும் அறிவாரோ? சுரங்கத்தில், ஆலைகளில், உலைக்க ளத்தில், பொலபொலக்க உடல்வியர்க்க உழைப்பவரே பொலிநலத்தைக் காண்பா ராவர் 35