பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

நிலவணங்கே! உனக்கதிரோன் கூடுங் காலை

நீலமுகிற் குழல்தளரக் கட்ட விழ்ந்து

பொலபொலவென் றுதிர்ந்தாறு மலர்கள் தாமோ

பூத்திருக்கும் விண்மீன்கள் ? வானம் நீங்கள்

நலம் நுகரும் பஞ்சணையோ ? கதிரோன் எங்கே

நடந்துவிட்டான்? உதிர்மலரை மீண்டும் சேர்த்துக்

குலமாலை யாக்குதற்கு மின்னல் நாணக்

கொண்டுவரச் சென்றனனே? கூருய் தோழி!


7

வானத்துத் தாயென்பாள் கதிரோன் என்ற
வம்படித்து விளையாடித் திரியும் சேயைச்
சீனத்துச் சிறுகிளியே! செங்க ரும்பே!
செய்யாதே வீண்வம்பு, புசிக்க வாவென்
றேனத்துச் சோறிட்டாள்; சிறுவன் ஓடி
எற்றிவிடச் சிதறியவெண் சோறு போல
மீனத்துக் குழுவெல்லாம் விளங்கும்! வீழ்ந்த
வெள்ளித்தட் டாமென்ன நிலவு தோன்றும்

8

முகிலென்னும் துகிலுடுத்தி நாணம் ஓங்க

முகம்மறைத்துச் செல்கின்ற பெண்ணென் பேனே ?

நகில்கொண்ட அல்லிப்பெண் முகம லர்ந்து

நகைகாட்டப் பிறரெவரும் அறியா வண்ணம்

பகல்மறைந்து முகில்நுழைந்து செல்லு கின்ற

களவொழுக்கத் தலைவனெனப் பகரு வேனே ?

மிகுவிண்மீன் வயிரங்கள் கொள்ளை கொள்ள

முகில்பதுங்கும் திருடனென விளம்பு வேனே?