பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கடல்

அறுசீர் விருத்தம்

1

லையொடு நின்பால்வங் தமர்ந்திருக்கும்
கடன்பட்ட மாந்தர் தம்மைத்
 திவலையொடு அலையெழுப்பி அக்கவலே
தீர்க்கின்றய் காதல் வாழ்வில்
 தவழ்கின்ற இளைஞர்க்கும் மனங்கொண்டார்
தமக்குமொரு சேர இன்பம்
 உவக்கின்ற படியெல்லாம் கொடுக்கின்றாய்
உவர்க்கடலே இன்னும் கேட்பாய்!

2


தங்கத்தைப் பவழத்தை ஒளிமுத்தைத்
தளிர்க்கரும்பை நெல்லை எல்லாம்
 துங்கத்தன் கைநீட்டித் தருகின்ற
தூயதமிழ் நாட்டை விட்டுச்
 சிங்கத்தை நிகர்தமிழர் கூலிகளாய்ச்
சீர்கெட்டுச் செல்லு கின்ற
 வங்கத்தைக் கண்டேயோ பொங்குகிறாய் ?
வாய்திறந்து கத்து கின்றாய்?

45