பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நெய்தலெனப் பெயர்சூட்டி இரங்கல்என

நினக்குரிமைப் பொருளும் தந்த
செய்கையது நன்றுநன்று! அழித்தழித்தே
இரங்கியழச் செய்தாய்! அந்தச்
செய்கையினை  மறந்துவிட்டோம் நீஎமக்குச்
செய்ந்நன்றி நினைத்த தாலே;
செய்வளர முகிலுக்கு நீர்கொடுக்கும்
சிறப்புனது நன்மை அன்றோ !
                       7

கடற்பரப்பில் அலைஎழும்ப நீர்பிளந்து

கப்பல்விரைந் தோடுங் காலை

அடக்குமுறை ஆங்கிலத்தார் அரசெதிர்த்த

சிதம்பரப்பேர் அண்ணல் தெற்குக்
கடற்பரப்பில் கலம்விட்ட நினைவெழுந்து
::கண்ணெதிரே தோன்றும்; இன்னும் 

விடக்காணேம் தமிழ்க்கலங்கள் நாட்டுணர்வு

விட்டனரே எனவும் தோன்றும்
                        8

உன்னிடத்தே முத்துண்டு பவழமுடன்

உணவாகும் மீனும் உண்டு
பொன்கொழிக்கும் கப்பல்களைப் பாழாக்கும்
பொல்லாத சுறவும் உண்டு
மன்னிலத்தும் அப்படித்தான் மக்களுக்குள்
வாழ்வழிக்கும் திமிங்கி லங்கள்
கன்மனத்துச் சுறவினங்கள் நல்லொளியைக்
காட்டுகிற முத்தும் உண்டு

47