பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கையின் எழுச்சி

             நேரிசை ஆசிரியப்பா

யற்கை யரசி உலாவர எண்ணி

எழுந்தனள் போலும் எனக்கரு தியதால்

விளக்குக் கம்பம் வீதியில் நின்ற

தந்திக் கம்பம் தலைவணங் கினவே ;

இவற்றின் கம்பியால் எடுத்தன தோரணம் ; 5

வீடுகள் தாமும் வீழ்ந்து வணங்கின ;

உயர்பெரு மரங்கள் உச்சியை மட்டும்

அசைத்து நின்றன. ஆர்ப்பொலி கேட்டு

நின்ற நிலையில் நெடுக வீழ்ந்தன ;

புள்ளினம் தம்வாய் புதைத்து நின்றன; 10

ஒடுகள் மலரென உதிர்ந்தன எங்கும்;

குடிசைக ளிவற்றைக் கோமகள் காணல்

வேண்டா என்று விரும்பிய வான்மரம்

அடிவயிற் றகத்தில் அடக்கிக் கொண்டன ;

சிற்சில குடிசைகள் சிதறி வானில் 15

வாண வேடிக்கை விளைத்தன; மக்கள்

அங்கு மிங்கும் அலைந்து திரிந்தனர் ;

கதிரவன் மதியன் கரந்து நோக்கினர் ;