பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிந்தவர் கூடும் பெற்றிமை போலப்
பொருந்தும் இருபுறத் திருந்து வருநீர்,45
இருபுலப் பகைவர் எதிர்எதிர் நின்று
பொருது வீழும் பான்மையே போல
அணி அணி யாக அவ்விடை மோதும்,
எண்பே ராயமும் ஐம்பெருங் குழுவும்
தன்புடை சூழத் தனிவீற் றிருக்கும் 50
மன்னவன் போல மற்றவை குழ்தர
மதர்த்து நிற்கும் மற்றொன் றொருபால்,
நிரல்பட அரிவையர் நின்று நடம்புரி
செயலெனப் பெரியவும் சிறியவும் ஆகி
ஆடி அசைதரும் அழகினை ஒருபால் 55
நாடி விழியால் நலம்நுகர்ந் திருந்தேன்;

அச்சமும் இன்பமும்

நலத்தகு நண்பர் உளத்தெழும் விழைவால்
அளப்பரும் ஆழமும் அகலமும் உற்ற
குளத்தினில் இயந்திரத் தோணிகள் ஏறி
விரைந்தோம், நானே வியர்வியர்த் திருந்தேன்;60
இருந்தஎன் நண்பர் ஏளனம் செய்தனர்
வீரம் பழித்தனர் விடுத்தேன் அச்சம்
நீரில்அத் தோணி நீந்துங் காலை
உலகை மறந்தேன் உயர்விற் பறந்தேன்
அடடா இன்பம்! அத்தனை இன்பம்! 65
அஞ்சுதல் ஒழிந்தார் நெஞ்சினில் இன்பம்
விஞ்சுதல் உறுதிஇவ் விளக்கமும் பெற்றேன்;

படைத்தவன் வாழ்க

மீண்டும் திரும்பி மேடையில் நின்று
காண்டகும் அந்தக் காட்சியை நோக்கி

56