பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்பமில்லை

எண்சீர் விருத்தம்

1 -

வார்ப்புரு:X-largerஎ/த்தனைதான் காத்திருந்தும் என்ம னத்தே ::இடங்கொண்டாள் எழில்கொண்டாள் நகைக்கும் முத்தனையாள் வரவில்லை பொறுத்தி ருக்க (பற்கள்

முடியவில்லை, அறிஞரவர் வரைந்து தந்த

புத்தகத்தைப் புரட்டிவிட்டுப் பேசா தங்குப்

பூட்டிவிட்ட வானெலியைத் திருப்பி விட டன்;

அத்தனையும் வீணுயிற் றென்னி டத்தே

அவளில்லை ஆதலினுல் இன்ப மில்லை!

2

அமையாத அலைக்கடலின் கரைய மர்ந்தேன்

அலைநிமிர்ந்து காதலினை நிமிர்தத தங்கே ;

இமையாடும் பொழுதேனும் இருந்தேன் அல்லேன்,

எழிற்பூங்கா வுள் நுழைந்தேன், தென்றல் வந்து

சுமையாக மோதிற்று ; நிழற்ப டத்தால்

துயர்திரும் எனநினைந்து சென்றேன் அங்கும்

உமையாளும் சிவனுரும் காதல் கூர

உருகியணைங் தமர்ந்திருக்கக் கண்டேன் கண்டேன்!

62