பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியரசன் கவிதைகள்

முதல் தொகுதி பற்றி......

  • தமிழ்த்தாத்தா மயிலை சிவமுத்து

ஆங்காங்கேசொல்லழகு நிறைந்து நிலவு ஒளிவீசுகின்றது.... * உன்னுருவே தோன்றுதடி" என்பதில் ' எங்கெங்குக் காண்னும் சக்தியடா’ என்ற சாயல் படிந்து பாரதிதாசன் பாதையில் ஏறென்ச் செல்லுகின்றனர். "மனம்புரவிச் செயல்தன்னைக் காட்டிடாதோ?” எனக் கேட்கிருர் கவிஞர். அவ்வினவில் பாட்டாளியின் உரிமைப் புரட்சி ஓங்கிநிற்கிறது.... முடியரசன் கவிதைகளைத் தமிழ்க்கனல்’ என்று கூறலாம்.

  • தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம்

கவிதைகள் உள்ளத்தை உருக்குகின்றன. அவளும் நானும் ' என்ற தலைப்பில் உள்ள கவிதைகள் அவரது தமிழ்ப் பற்றை உணர்ச்சியோடு வெளியிடுகின்றன, காதற் கவிதைகள் ப்ல இன்பம் பயப்பனவாய்த் திகழ்கின்றன. வீரத்தைப் பற்றிய பாடல் களும் அதில் இடம்பெற வேண்டுமென்பது எனது கருத்து.

  • டாக்டர் மா. இராசமாணிக்கனர்

"...பைந்தமிழ் இலக்கணம் பாங்குறக் கற்றுள்ளமையால் முடியரசன் கவிதைகள்' இலக்கண வரம்புக்கு அடங்கியவை யாக இருக்கின்றன. உயர்ந்த கருத்துக்கள் - சிறந்த தமிழ்நடை - இலக்கண் வரம்பு இம் மூன்றும் இவரது கவிதைகளை மிகவுயர்த்திக் காட்டுகின்றன.”

  • மொழித்துறையறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர்

வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந் தீத்திறக் காலை தெளிமருந்தே - முத்த முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும் முடியரசன் செய்யுண் முறை