பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* புது உலகத்தைச் சிருஷ்டிக்க நினைக்கும் இருபதாம் நூற்ருண்டுக் கவிகளில் ஒருவர் முடியரசன். புதருள் கனி யில் விதவை மறுமணத்தைப் பற்றி இங்கிதமாகப் பிரஸ்தாபிக்கிருர். புதுமைப் பெண் ணில் கட்டாயக் கல்யாணத்தை வெறுக்கிருர்."தொழிலாளி' விறகுவெட்டி’ குதிரை நினைத்தால் ...... முதலிய பாட்டுக்களில் முத லாளித்துவ ஒழிப்பை ஆதரிக்கிருர். இயற்கையை வரு ணிக்கும் கவிதைகள் அழகின் சிரிப்பு ஆறு கடல் முதலியவை. உயரிய கவிதை மணம் இவற்றில் வீசுகிறது. கற்பனைகள் ஊற்றுப் பெருக்குப்போல் வருகின்றன. "

  • திருச்சி வானொலி நிலையம் '

"...பாடல்கள் விறுவிறுப்பாகச் செல்கின்றன. நல்ல உதாரணங்கள் கையாளப் பெறுகின்றன. பயில்வோர்க்கு எளிமையதாய்ப் பாடல்கள் அமைந்துள்ளன. ஆசிரியர்தம் உவமைகள் போற்றற்குரியன. இன்றைய சமுதாயத்தில் தொழிலாளர் படும் அவதிகள் சிலவற்றைச் சித்திரித் திருக்கிருர். மறைந்த திரு. வி. க. அவர்களைப் பற்றிப் பாடும் பாடல் உளமுருக்கும் பாடலாகும்-பாடல்கள் சில பயில்வார் உள்ளத்தைத் தொடுவனவாக அமைந்துள்ளன.

சுதேசமித்திரன் '

4 து பாட்டுப்பாட்டு என்று பலரும் பாடும் இந்த காட்களில், பாங்கான பாடல்களைப் படிப்பது பரமானந்த மாகும். அதிலும் பழமையைத் தழுவியும் புதுமையைப் புகட்டியும் இனிய எளிய நடையில் இயற்றப் பெறும் பாக்கள் எத்துணைப் பேரின்பம் பயக்கு மென்றும் இங்கு எடுத்துக்கூற வேண்டியதில்லை. அத்துணைச்சிறந்த பாடல் கள்தாம் முடியரசன் கவிதைகள் ' என்று முக்காலுங் துணிந்து கூறலாம்............

ஈழகேசரி '