பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"...........முடியரசன் கவிதைகளைப் பற்றிச் சுருக்க மாகச் சொல்லவேண்டுமென்ருல் கருத்துப் பொலிவு, எளிய சொற்கள், இனிய ஓட்டம், தமிழ் வளம், சொற் பொருள் நயம் இவை கலந்து மொழியுணர்ச்சியைத் தம் அடிப்படையாகக்கொண்டு வாழ்க்கையுடன் ஒட்டி உற வாடும் அனுபவங்களின் படப்பிடிப்பாக, அவலச்சுவை யிலே பிறந்து ஆத்திரத்தை மூட்டுவனவாக, சிரிக்க வைத்து இடித்துக் கூறுவனவாக அவைகள் விளங்கு

கின்றன.........

" தென்றல் '


:செந்தமிழ்ச் சொற்செறிவும் இலக்கண அமைதி யும் இத்தொகுப்பில் உள்ள பாடல்களில் உள்ளன. ஆசிரி யருடைய பரந்த உலகியலறிவு, தமிழார்வம், உவமைச் சிறப்பு முதலியன போற்றத்தக்கவை. கவிஞரின் கற்பனைத் திறனும், பொருளாதாரக் கொள்கையும் இவற்ருல் புலன கின்றன. கருத்துக்கள் காலப் போக்குக்கு ஏற்றவையாக

உள்ளன..........

" வாரச் செய்தி '