பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரம் சென்ருல் நன்மை பெறலாம் : என்றனர் என்பால் இருப்பே இல்லை உழன்றேன் உழன்றேன் உற்ருர் ஒருவர் பார்க்க வந்தார் ' பகவான் காப்பார் திருப்பதி சென்று தீர்த்தம் ஆடி முடிஎடுப் பேனென முடிவுசெய் தால்நோய் விலகும் ’ என்று விளம்பினர் ; கையில் இல்லே யாயினும் என்னுயிர் வேட்கையால் வேண்டிக் கொண்டேன் விரைந்தன. சின்னுள் ; ஒய்ந்தது நோயும் உழைத்துழைத் தில்லாள் ஊட்ட ஊட் உடலுரம் பெற்றேன்;

உற்ருர் சொன்ன உரை தவ ருமல் காளேகள் காட்டிக் கடன்பணம் பெற்றுத் திருப்பதி சென்றேன் திருவருள் பெறவே : அருச்சனே செய்யவும் முடிஎடுப் பதற்கும் இரண்டு சீட்டுகள் ஈந்தனர் அவற்றை அன்பாய்ப் பணிவாய் அருச்சகர்க் களித்தேன் இரண்டில் ஒன்றை என் கையிற் கொடுத்து " முடிஎடுக்க அங்கே முதலிற் செல்வாய் ’’ என்ருேர் நாவிதர் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டச் சுருக்கெனச் சொன்னேன் நாவிதர் எடுக்கவா கானிங்கு வந்தேன் ? உள்ளூர் நாவிதர் உண்டு பலபேர் அவரை ஒதுக்கி ஆண்டவன் தனக்கே வைத்துளேன் முடியை வம்புசெய் யாமல் நீரே எடுத்தருள் புரிவதே நேர்மை என்றேன் அருச்சகர் எரிந்து விழுந்தார்.

24