பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ள ம்

இல்லாத பொல்லாத செயல்கள் கூறி இதற்கென்றே வாழ்கின்ற உள்ளம் உண்டு ; கல்லவரைக் கெடுத்தொழிக்கும் அன்பைத் தீய்க்கும் காயகற்கும் மனேவிக்கும் பகையை ஆக்கும் கொல்லவரும் பாம்பென்னக் கொடுமை செய்யும் குடும்பத்தில் உடன் பிறப்பில் பிளவுண் டாக்கும் சொல்லரிய போர்மூட்டும் தீமை செய்யத் துணிவுதரும் அவ்வுள்ளம் கூனல் உள்ளம் so

முடிச்சுள்ளம் எனும்பேரே இதற்குசி சாலும் ; முதலிலொரு நண்பரிடம் குறைகள் சொல்லும் அடுத்தகனம் ஒடோடி மற்ருேர் தம்மை அடுத்திருந்து முதலவரைத் தாழ்த்திக் கூ-அம் படித்தவரைப் பழித்துரைக்கும் கட்சி பேசிப் பாழ்படுத்த முனேந்துகிற்கும் இந்த ஒன்றே தடித்திருக்கும் கூனுள்ளம் வாழும் மட்டும் தரணியிலோர் அம்ைதியிலே பகையே மூளும் உ

28