பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராளும் வேந்தர் பலபேர் எனேவளர்த்தார் ஊராளும் குறுமன்னர் ஊட்டி வளர்த்தோர்கள்

ஏராளம்; இருந்தாலும் இவ்வுலகைக் காப்பதற்கே ஏர்ஆளும் வேளாளர் என்னே வளர்த்தவிதம்

ஒர்நாளும் நான் மறவேன் உப்பிட்ட என்தோழன் காராளும் கையுடையான் காத்தான் சடையப்பன்

அன்பைக் குழைத்தெடுத்து ஆர அருத்திஉயிர் என்பும் எனக்காக்கி இருந்தான் அவன் துணையால்

வறுமைத் துயரறியேன் வாட்டம் சிறிதுமிலேன் அருமைக் கலையுணர்வு ஆன்று மிகக்களித்தேன்

களிப்புணர்வு பொங்கி எழக் காவியம் ஒன்றுகண்டேன் அளிக்கருணை காட்டியதால் அங்கன்றி மறக்காமல்

உள்ளம் மிகவிரும்பி ஒவ்வோர் இடங்களிலே வள்ளல் சடையப்பன் வளர்பெயரைப் பொறித்திருந்தேன்

பொறித்திருந்த காவியத்தைப் பூவுலகோர் ஏற்பதற்கு நெறித்துறையில் அலைமோதும் நீளரங்கத் தலத்துறையும்

முக்கோட்டு நாமத்தார் முன்வைத்தேன் அரங்கேற்றும் சொற்கேட்டு மதவெறியால் சூழ்ச்சிபல செய்தார்கள்

இன்றென்ருர் நாளே என் ருர் இடுப்பொடிய வைத்தார்கள் என்றென்றும் அவரிழைத்த இடுக்கண் மறப்பதில்லை அவ்வளவில் விட்டாரா ஆய்ந்துரைத்த என்கவியைச் செவ்விய நன்முறையில் சேர்ந்து பலர் கற்ருர்கள் நன்மைக்கோ தீமைக்கோ நம்பும் படியாகப்

புன்மைக் கவிபலவும் புகுத்திவிட்டார் பெருத்துவிட்டேன்

34