பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 'கெற்பயிர்கள், கருவுற்ற பச்சைப் பாம்பின் தோற்றம்போல மெதுவாகக் கருவுற்று, பின்பு கதிர்களை ஈன்று, கதிர்கள் முற்றதபொழுது, செல் வம் பெற்ற கீழ்மக்கள் செருக்கித் தலைாகிமிர்ந்து நிற்பதைப் போலத் தமது கதிர்களாகிய தலையை வனங்காமல் கேரே கிறுத்தி, கதிர்கள் முற்றிய வுடன், உண்மைப் பொருளை ஆராய்ந்து கூறு கின்ற அறநூல்களைக் கற்ற அறிவுடைய சான் ருேர்களைப்போலத் தலே வணங்கி விளைந்தன’’ என்பது இப் பாடலின் பொருளாகும். இப் பாட்டினுள், கெற்பயிரைக் குறிக்கும் 'சொல்’ என்பது எழுவாயாக கிற்க, அதன் தொழி லாகிய கருவிருந்து, ஈன்று, கிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்கள் ஒன்றனை ஒன்று கொள்ளுமாறு இடையே அமைத்துக் காய்த்த: என்னும் பயனிலையை இறுதியிலே தந்து முடித் தமையால், இப் பொருள்கோள், ஆற்று நீர்ப் பொருள்கோள் எனப்படும். ஆற்றுநீர்ப் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள் என்றும், யாற்றுவரவுப் பொருள் கோள் என்றும், ஆற்றெழுக்குப் பொருள்கோள் என்றும் வழங்கவும் படும். (ஆறு-யாறு.) ஆற்று நீர் ஆரம்பத்திலிருந்து இடையீடில் லாமல் தொடர்ந்து செல்லுதல்போலப் பாட்டினுள் எழுவாய் முதலில் அமைய, இடையில் வினையெச் சங்கள் ஒன்றனே ஒன்று கொண்டு முடியுமாறு அமைந்து, இறுதியில் பயனிலை பெற்று முடிவது ஆற்று நீர்ப் பொருள்கோள் எனப்படும்.