பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1C3 அமைந்துள்ளது; புலால் உண்டால், அங்ங்னம் உண்டவர்களை விழுங்கிய கரகம், அவர்களை உமிழ்வதற்கு வாயைத் திறவாது’ என்ற பொருள் அமைந்துள்ளது. இத் திருக்குறளில், நடுவே கிற்கும் ஊன்’ என்ற சொல், ஊன் உண்ணுமை யுள்ள துயிர் கிலை என முன்னும், ஊன் உண்ண அண்ணுத் தல் செய்யா தளறு’ எனப் பின்னும் சென்று பொருள் தருகின்றது. கடுவே கிற்கும் ஊசல், ஆட்டும் பொழுது முன்னும் பின்னும் சென்று வருதல்போல, நடுவே கிற்கும் ஊன் என்ற சொல், பொருள் கொள்ளும் பொழுது முன்னும் பின்னும் சென்று பொருள் தருகின்றது. எனவே, இது தாப்பிசைப் பொருள் கோள் எனப்படும். (தாம்பு= ஊசல், தாப்பு என வலித்தல் விகாரம் பெற்றுள்ளது. இசை-சொல்.) இலக்கண விதி: இடையில் கிற்கும் சொல், முதலிலும், ஈற்றிலும் சென்று பொருளைத் தரு வதுதாப்பிசைப் பொருள்கோளாகும். 4. மொழிமாற்றுப் பொருள்கோள் 'கரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை' இப் பாடலில் ஆழ’ என்னும் பயனிலைக் கேற்ற 'அம்மி என்னும் சொல்லை, மிதப்ப' என் னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட்டுள்ளது.