பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 பல + பல = பல்பல | சில + சில = சில் சில பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, "ெ. மொழி ல வில் உள்ள அகரம் கெட கின்ற ல்-ற் ஆகத் திரியாமல், ஒரோவழி, பல்பல, சில்சில என வும் புணரும். (பிற என்ற மிகை விதிப்படி...) பல + கலை = பலகலை, பல்கலை சில + படை = சில படை, சில்படை பல + நாள் = பலநாள், பன்னுள் சில - மணி = சிலமணி, சின்மணி பல + யாழ் = பல யாழ், பல்யாழ் சில + வளை = சிலவளை, சில்வளே பல + அணி = பலவணி, பல்லணி சில + ஆயம் = சிலவாயம், சில்லாயம் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களே நோக் குங்கள். 'பல, சில” என்ற சொற்களுக்குமுன் பிற பெயர்களாகிய வல்லினமும்,மெல்லினமும், இடை யினமும் உயிரெழுத்துக்களும் வந்து புனரும் பொழுது, அவை இயல்பாயும், ல வில் உள்ள அகரம் கெட்டு விகற்பமாயும் புணரும். (விகற்ப மாவது, அகரம் கின்றும், கெட்டும் புணர்வது.) பல + படை = பற்படை சில + படை = சிற்படை இங்ங்னம், பல, சில” என்பவை பிறபெயர் கள் வந்து புணரும்பொழுது, மேற்கூறிய விதிப்