பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மண் + யாப்பு=மண்யாப்பு பொன்+யாப்பு= பொன்யாப்பு இவ்வாறு, வேற்றுமையிலே இடையினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். (அல்வழி) மண் + சிறிது=மண் சிறிது பொன் + சிறிது= பொன்சிறிது மண் + பெரிது=மண் பெரிது பொன் + பெரிது= பொன்பெரிது இவ்வாறு, அல்வழியிலே, வல்லினம் வரின், னகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண்-ஞான்ற து=மண் ஞான்றது பொன் ஞான்றது= பொன்ஞான்ற து மண்-மாண்டது=மண்மாண்டது பொன் + மாண்டது= பொன்மாண்டது. இவ்வாறு, அல்வழியிலே மெல்லினம் வரின், னகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண்+யாது=மண்யாது பொன்+யாது=பொன்யாது மண்-வலிது=மண்வலிது பொன் + வலிது=பொன்வலிது இவ்வாறு, அல்வழியிலே இடையினம் வரின், னகர, னகர ஈறுகள் இயல்பாகும். (கண்-பொறி =கட்பொறி எனப் பண்புத் தொகையிலும், பொன் - சுணங்கு=பொற்சுணங்கு என உவமைத்தொகையிலும் அல்வழியில், ஒரோ வழி னகர, னகர ஈறுகள் திரிதல் உண்டு. மண்+ சுமந்தான் = மண் சுமந்தான், பொன் + சுமந்தான்= பொன்சுமந்தான் என வேற்றுமையிலே,வருமொழி