பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 (வேற்றுமையில் வலிமிகல்) நாய் + கால்=நாய்க்கால் தேர்-தலை=தேர்த்தலை யாழ் + கோடு=யாழ்க்கோடு இவ்வாறு வேற்றுமையிலே யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் மிகும். (வேற்றுமையில் இனத்தோடு உறழ்தல்) வேய் + குழல்=வேய்க்குழல், வேய்ங்குழல் ஆர் + கோடு=ஆர்க்கோடு, ஆர்ங்கோடு பாழ் துாறு=பாழ்த்துறு, பாழ்ந்து று இவ்வாறு வேற்றுமையிலே யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் ஒருகால் மிக்கும், ஒருகால் இனமெல்லினத்தோடு உறழ்க் தும் வரும். கன்னுரல் நூற்பாவுள் (224) 'மேல் என்ற மிகை விதிப்படி, வேற்றுமையில் இயல்பாதலும், அல்வழியில் உறழ்லும், தனிக்குறிலைச் சாராத யகரத்தின்முன் யகரம் வரின், அல்வழி வேற் றுமை இருவழியிலும் நிலைமொழி யகரங் கெடு தலும் கொள்ளுதல் தேண்டும். (வேற்றுமையில் இயல்பாதல்) வாய் + புகுவது=வாய்புகுவது இங்கு, வேற்றுமையில் இயல்பாயிற்று. (அல்வழியில் உறழ்தல்) பாழ் - கிணறு=பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு இங்கு அல்வழிப் பண்புத்தொகையுள் உறழ்ந்து வந்துள்ளது.