பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இவ்வாறு, அல்வழியிலே லகர, ளகர மெய் களின் முன் வல்லினம் வரின், ஒருகால் இயல்பா கியும் ஒருகால் திரிந்தும் வரும். வேற்றுமை) கல்-மாட்சி=கன்மாட்சி முள்-மாட்சி=முண்மாட்சி இவ்வாறு, வேற்றுமையிலே லகர, ளகர மெய் களின் முன் மெல்லினம் வரின், லகரம் னகரமாக வும், ளகரம் னகரமாகவும் திரியும். (அல்வழி) கல் +மாண்டது= கன்மாண்டது முள் + மாண்டது=முண்மாண்டது இவ்வாறு, அல்வழியில் லகர, ளகர மெய் களின் முன் மெல்லினம் வரின், லகரம் னகரமாக வும், ளகரம் னகரமாகவும் திரியும். (வேற்றுமை) கல்-யாப்பு= கல்யாப்பு முள் + யாப்பு=முள்யாப்பு இவ்வாறு, வேற்றுமையிலே லகர, ளகர மெய் களின் முன் இடையினம் வரின் இயல்பாகும். (அல்வழி) கல் + யாது= கல்யாது முள்+யாது = முள்யாது இவ்வாறு, அல்வழியிலே லகர, ளகர மெய் களின் முன் இடையினம் வரின் இயல்பாகும். கல் + தீது=கற்றீது முள்+ தீது=முட்டீது