பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


இவ் வெடுத்துக்காட்டுக்களில், தம்முடன் மயங்காத தகரம் வந்தபொழுது, லகர, ளகரங்கள் இயல்பாகாமல் முறையே றகரமாகவும், டகரமாக வும் திரிந்துள்ளன. அல்வழியுள் இங்ஙனம் வரும் திரிபு ஒன்றை மட்டும் ஏற்புழிக்கோடலால் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். இலக்கண விதி: லகர, ளகரமாகிய இரண்டு மெய்யிறுகளும் வேற்றுமையில் வல்லினம் வந்தால், முறையே றகரமாகவும், டகரமாகவும் திரியும். அல்வழியில் வல்லினம் வந்தால் இயல் பாயும் திரிந்தும் வரும். வேற்றுமையிலும் அல் வழியிலும் மெல்லினம் வர்தால், லகர, ளகர ஈறு கள் முறையே னகரமாகவும்,ணகரமாகவும் திரியும். வேற்றுமையிலும் அல்வழியிலும் இடையினம் வந்தால், லகர, ளகர ஈறுகள் இயல்பாகும். லள வேற் றுமையிற் றடவு மல்வழி அவற்ருே டுறழ்வும் வலிவரி ெைமலி மேவி னணவு மிடைவரி னியல்பும் ஆகு மிருவழி யானு மென்ப. (ந-நூற்பா 2 27.) பயிற்சி விளுக்கள் 1. பல, சில என்னும் இவ்விரு சொற்களும் தம்முன் தாம்வரின் எவ்வாறு புணரும்? 2. பல, சில என்னும் இவ்விரு சொற்களும் தம்முன் பிறவரின் எவ்வாறு புணரும்? 3. பூ என்னும் பெயர் வல்லினம் வர எங்கனம் புணரும்? சான்று தருக.