பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஐந்து நிலங்களுக்கும் உரிய பெரும்பொழுதும்-சிறுபொழுதும் 1. குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் என்ற பெரும் பொழுதுகளும், யாமம் என்ற சிறுபொழுதும் குறிஞ்சி கிலத்துக் குரியன. 2. முல்லை கார் காலமாகிய பெரும்பொழுதும், மாலை யாகிய சிறுபொழுதும் முல்லை நிலத்துக் குரியன. 3. மருதம் ஆறு பெரும்பொழுதுகளும், வைகறையாகிய சிறுபொழுதும் மருத கிலத்துக் குரியன. 4. நெய்தல் ஆறு பெரும்பொழுதுகளும், எற்பாடு எனப் படும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக் குரியன. 5. பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி என்ற பெரும்பொழுதுகளும், கண்பகலாகிய சிறுபொழு தும் பாலை நிலத்துக் குரியன. கருப்பொருள் ஒவ்வொரு தினேக்கும் உரிய இயங்குதினே யும், நிலத்திணையுமாகிய பொருள்கள், கருப் பொருள்கள் எனப்படும். அவை,தெய்வம், உயர்ந் தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், மரம், உணவு, Lഞ്വൗ!, யாழ், பண், தொழில் ورا صلى الله عليه وسلم எனப் பதின்ைகு வகைப்படும். அவை வருமாறு: