உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 நேர் நிரை’ என வருகின்ற அசைகளைப் பிரித்தல் வேண்டும். பிறகு, அங்ஙனம் அசை பிரிக்கப் பட்ட சீர்களுக்கு உரிய வாய்பாடுகளாகிய தேமா புளிமா என்பன போன்ற வாய்பாடுகளைக் கூறுதல் வேண்டும். அதன் பிறகு, நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் தட்டு வருகின்ற, இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை என்பன போன்ற தளைகளை எடுத்து எழுதுதல் வேண்டும். இறுதியாக, அடி தோறும் ஒவ்வொரு சீரிலும் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்ற சீர் எதுகை வகைகளே பும், முதல் எழுத்து ஒன்றி வருகின்ற சிர் மோனை வகைகளையும், அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்ற அடி எதுகைகளையும், அடி தோறும் முதல் எழுத்து ஒன்றி வருகின்ற அடி மோனைகளையும் எடுத்து எழுதுதல் வேண்டும்.

அலகிடும் முறை வருமாறு:

'ஆக்க மதர் வினாய்ச் செல்லு மசைவிலா ஊக்க முடையா னுழை.'

சீர் பிரித்தல்:

நேர் நேர் நிரைநிரை நேர்நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நிரை.

வாய்பாடு கூறுதல்:

தேமா கருவிளம் தேமா கரு விளம் தேமா புளிமா மலர்.

தளை எழுதுதல்:

தேமா1 கருவிளம்2 தேமா3 கருவிளம்4 தேமா5 புளிமா6 மலர் 10