பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 ஆலமரம்-கவிஞன் துணிவு மனப்பான்மை உடைய வன்-எதற்கும் எவர்க்கும் அஞ்சாத கெஞ்சு-தன்னல. மும், பொதுகலமும்-பல உள்ளங்கள். பலவித மறுமலர்ச்சி-சொற் சிக்கனம், உணர்ச்சி வேகம், தனிப்பாணி-எண் சீர் விருத்தத்திற்கு ஒரு தனி நட்ை-அழகின் சிரிப்பு-குடும்ப விளக்கு-தனி மனிதனும் பொதுமக்களும்-சோம்பிக் கிடப்பவனிடம் பாரதிதாசன் - மலேயும் கவிஞரும்-காதலும் கருத் தடையும்-தமிழியக்கம்-தாய்மொழி வளர்ச்சி-கவி ஞரின் குணாகலன்கள்-பாடல்களில் தென்றல், புயல், குயில், சிங்கம், வெண்ணிலவு, செங்கதிர், இனிப்பு, கசப்பு, தண்மை, வெம்மை. முடிவுரை: இருளால் ஞாயிறு மறைக்கப்படுவ தில்லை-இருள் அகலட்டும் - ஞாயிற்றின் ஒளி பர வட்டும்-கவிஞர் வாழ்க ! 11. கொடுத்த தலைப்புக்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுதல் கொடுத்த தலைப்புக் குறித்துக் கட்டுரை எழுதப் புகும் மாணவர்கள், அத்தலைப்பிற்கு வேண்டிய செய்தி களை நூல்கள் வாயிலாகத் திரட்டுதல் வேண்டும். பனு வல்களில் படித்த செய்திகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொளல் வேண்டும். கட்டுரையை எவ்வாறு அமைக்கலாம் எனச் சிந்தித்து, மனத்தில் கட்டுரைக்கு ஒரு முன் வடிவம் கொடுக்கப்படல் வேண்டும். பிறகு, அவ் வடிவை எழுதிவைத்துக்கொண்டு கட்டுரையை எழுதத் தொடங்க வேண்டும். ஒரு பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டுமென் ருல் - அப்பெரியாருடைய பி ற ப் பு,