பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பொருளெழுத முற்படல் வேண்டும், காட்ட்ாக:பாரதிதாசனின் பாடலும், அதனுடைய திரண்ட் பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் காட்டாகக் கொண்டு பிற செய்யுள்களுக்கும் திரண்ட் பொருளெழுதிப் பழகுக. 'கணியிடை ஏறிய சுளையும்-முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும்-தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும்-தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!' 'பழுத்த பழத்தின் சுளையையும், முற்றிய கரும் பின் சாற்றையும், குளிர் மலரில் அமைந்த தேனையும், காய்ச்சுகின்ற வெல்லப் பாகிடை அமைந்த சுவையை யும், கல்ல பசு கொடுக்கின்ற பாலேயும், தென்னை நல்கு கின்ற குளிர்ந்த இளநீரையும் நான் இனிமையுடையன என்று கூறுவேன். ஆ ைல், தமிழை என்னுடலில் உறைகின்ற உயிர் என்பேன்; காணுங்கள்” என்கின் ருர் பாவேந்தர் பாரதிதாசனர். 20. கூட்டங்கள் - மாநாடுகளுக்கு வரவேற்புரை எழுதுதல் மா காடுகள் கூட்டப்பெறுகின்றபொழுதும், கூட் ட்ம் கூடுகின்றபொழுதும் வருகை தந்துள்ள தலைவர், சொற்பொழிவாளர், பொதுமக்கள் ஆகிய யாவரையும்