பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 சிறு தலைப்புக்களிட்டுக் கதையை வரைந்து செல்வது அந்நூலை அழகுபடுத்துகிறது. யாவும் சிறப்புற அமைந்திருந்தாலும், கதை மாக்தரின் பண்பு கலன்கள் சிறப்புற விளக்கப்பட்டிருந்: தாலும், வருணனைகள் விளக்கி வரையப்பட்டிருக் தாலும், நகையூட்டும் செய்திகள் இடையிடையே காணப்பட்டாலும், புத்தகத்தில் கதையின் சிறந்த பகுதிகளை விளக்கக்கூடிய படங்களை இடை இடையே: சேர்க்காதது.ஒரு குறையாகும். மேலும், அக் கதையின் மூலப் பாடல்களை மிகுதியாக மேற்கோளாகக் காட்டி யிருக்கலாம். பொதுவாகப் பார்க்கின்றபொழுது,புத்தகம் கல்ல தகுதியுடையதாகவிருக்கிறது என்பது வெள்ளிடை மலை. ஆதலின், இதைப்போன்று தமிழ் இலக்கியங் களை அறிமுகப்படுத்துகின்ற நூல்கள் மாண வர்க ளிடையே பல்கிப் பெருகுவதாக. 19. செய்யுள் திரண்ட பொருள் எழுதுதல் மாணவர்கள் ஒரு செய்தியைப் படித்தால் அதனை உளத்தமைக்க வேண்டும். நீ படித்தது என்ன” என்று கேட்டால், உடனே படித்ததை மொழிதல் வேண்டும். அதுபோலவே ஒரு செய்யுளைப் படிக்கின்றபொழுது அதன் கருத்துக்களைத் தொகுத்து மனத்தக த்தே. நிறுத்தவேண்டும். அதனுடைய திரண்ட பொருளை எழுது என் றல், உடனே பாட்டின் பொருளைச் சுவை குன்றது எழுத வேண்டும். செய்யுளின் திர ண்ட் பொருளே எழுதுவதற்கு முன், அதனை இருமுறை மும் முறை கன்கு மனமொன்றிப் படித்தல் வேண்டும். அருஞ் சொற்களாயின் அவற்றின் பொருளை அகர வரிசை முதலியவற்றின் துணையாற் கண்டு, பின்பு,