பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 18. நூல் மதிப்புரை எழுதுதல் மாணவர்கள் ஒரு நூலைப் பயின்ற பிறகுதான், அதற்கு மதிப்புரை எழுதத் தொடங்கவேண்டும். மதிப் புரை என்பது அந்நூலின் சிறப்பை விளக்குவதாக வும், குறைகளைத் தெரிவிப்பதாகவும் அமைதல் வேண்டும். பனுவல் மட்டுமல்லாது பார்த்த திரைக் காட்சி, காடகக் காட்சி, பொருட்காட்சி, கண்காட்சி முதலியன குறித்தும் மதிப்புரை எழுதலாம். பொன்னை உறைத்து மாற்றுப் பார்ப்பதுபோல, நூலாகிய பொன்னே அறிவாகிய கல்லில் உறைத் துப் பார்த்து உண்மை யுரைப்பதுதான் மதிப்புரையாகும். இச் செயலே மாணவர்கள் கன்கு வளர்த்துக் கொளல் வேண்டும். துணைப்பாடநூல் பற்றிய மதிப்புரை கான்,பள்ளியிறுதி வகுப்பிற்கு வைக்கப்பட்டுள்ள தமிழ்த் துணைப் பாட நூலான வீணை வித்த கன்’ என்ற நூலே ப் பயின்றேன். அந் நூல் சிறந்த தமிழ் கடையைக் கொண்டுள்ளது. அவ் வாசிரியர் அக் கதையை யாத்த புலவர் பற்றியும், அந் நூல் பற்றியும் முதலில் விளக்கிப் பின் கதைக்குச் செல்வது அவ ருடைய வரலாற்று உணர்வைக் காட்டுகிறது. பெருங்கதையைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற முறையில் சிறு கதையாக்கி முக்கியப் பகுதிகள் அனைத்தும் இடம்பெறச் சுருக்கி, அமைத்திருப்பது அவரது தொகுத்துரைக்கும் தன்மைக்குச் சான் றகும். ஒவ்வொரு காண்டத்தையும் தனித் தனியாகப் பிரித்துப் பகுதிகளாக்கி ஒவ்வொரு பகுதிக்குள்ளும்