பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Ꮯ4 எதிர்மறை வாக்கியம்: "நான் புலால் உணவை உண்ணேன்' இவ்வெடுத்துக் காட்டு, கான்'என்னும் எழுவாயின் தொழில் நிகழாமையை உண்ணேன்" என்னும் எதிர் மறை வினையால் வெளிப்படுத்தலின், இ.து எதிர்மறை வாக்கியமாயிற்று. நேர்கூற்று வாக்கியம்: கைகேயி இராமனே நோக்கி, 'பதின்ைகு ஆண்டு கள் காட்டிலே வாழ்க’ என்று கூறினள். இவ்வெடுத் துக் காட்டில் கைகேயி வாய்மொழியை மாற்றது அவ்வாறே கூறியிருத்தலின், இது கேர் கூற்று வாக் கியம் எனப்படும். கூறின செய்தி மேற்கோட்குறிக் குள் காட்டப்பட்டிருத்தலை கோக்குக. அயற் கூற்று: கைகேயி இராமனிடம் பதின்ைகு ஆண்டுகள் காட்டிலே வாழுமாறு கூறினள். இவ்வெடுத்துக் காட்டில் மேற்கோள் குறி நீக்கப்பட்டிருத்தலையும், தன்மையிடம் படர்க்கையிடமாக்கப்பட்டிருத்தலையும், வாழ்க’ என்னும் முற்று வாழுமாறு’ என எச்சமாக்கப் பட்டிருத்தலையும் கோக்குக. இஃது அயற் கூற்று எனப்படும். 2. வாக்கிய அமைப்பு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், எச்சங்கள் கிற்கும் முறை தமிழ் மொழியில் எழுவாய் தொட்க்கத்திலும், ப யனி2ல இறுதியிலும், செயப்படுபொருள் இட்ை யி லும் அமைவதே பெருவழக்கு.