பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7 'உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை கயாரும் மறவார்' 1. இஃது ஒர் எழுவாயையும், ஒரு பயனிலையையும் கொண்டிருத்தலின் தனி வாக்கியம் என்று கூறப்படும். 2. இஃது ஒர் செய்தியை வெளிப்படுத்தி கிற்றலின் செய்தி வாக்கியம் எனவும் கூறப்படும். 3. வின வடியாகப் பிறந்த பெயராகிய யாரும்’ என்பதன் வினையாகிய 'மறவார்’ என்பதைப் பயனிலையாகக் கொண்டிருத்தலின் செய்வினை வாக் கியம் என்றும் கூறலாம். 4. இவ் வாக்கியம் எதிர்மறை வி னேயைக்கொண்டு முடிந்திருத்தலின், எதிர்மறை வாக்கியம் என்றும் கூறலாம். இவ் வாக்கியத்தை வேறு பல வாக்கியங்களாக வும் மாற்றியமைக்கலாம். 1. உள்ளத்தை உருக்குவன சிறந்த பாடல்கள்; அவற்றை யாரும் மறவார் (தொடர்வாக்கியம்) 2. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல் களாயின், அவற்றை யாரும் மறவார். (கலவை வாக்கியம்) 3, உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்கள், யாராலும் மறக்கப்படா. (செயப்பாட்டு வினை வாக்கியம்) 4. உள்ளத்தை உருக்காத சிறப்பற்ற பாடல்களை யாரும் மறப்பர். (உடன்பாட்டு வாக் கியம்) 5. விபுலானந்தர் உள்ளத்தை உருக்கு கின்ற சிறந்த பாடல்களை யாரும் மறவார்’ என்று கூறுகின் ருர். (கேர்கூற்று வாக்கியம்)