பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்களின் முன்னும் 'எ' என்னும் வி ைஎழுத்தின் முன்னும் வரு மொழியில் வல்லினம் வந்தால் மிகும். எ-டு: அ + கோயில் = அக்கோயில் இ- பள்ளி = இப்பள்ளி உ-தென்னை = உத்தென்னை எ--சார்பு = எச்சார்பு 2. சட்டெழுத்துக்களின் திரிபுகளாகிய அந்த', "இந்த என்பவற்றின் முன்னும், 'எ' என்னும் வின வெழுத்தின் திரிபாகிய எந்த என்பதன் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: அந்த கொடி = அந்தக் கொடி இந்த - சோலை இந்தச் சோலை எந்த + பாதை = எந்தப் பாதை 3. அப்படி, இப் படி, எப்படி என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: அப்படி பேசினுன் = அப்படிப் பேசினுன் இப்படி - பார் = இப்படிப் பார் எப்படி-சொல்வாய் = எப்படிச் சொல்வாய் 4. இடம் பொருள் ணர்த்தும் அங்கு, இங்கு, எங்கு என்பவற்றின் முன்னும் வலி மிகும். எ-டு: அங்கு + சென்றன் = அங்குச் சென்றன் இங்கு - பார்த்தான் = இங்குப் பார்த்தான் எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய் 5. மேலும், இனி, தனி, மற்று, மற்ற, மற்றை என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகும்.