பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 - எ-டு: இனி - செல்க = இனிச்செல்க தனி + பாட்டு = தனிப்பாட்டு மற்று + காண்க = மற்றுக் காண்க மற்ற + பாடம் = மற்றப்பாடம் மற்றை + செல்வம் = மற்றைச்செல்வம் 6. உவமைத் தொகை சிலவற்றில் வல்லினம் மிகும். எ-டு: மலர் - கண் = மலர்க்கண் வேய் + தோள் = வேய்த்தோள் தாமரை - கண் = தாமரைக்கண் 7. இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். = எ-டு: சாரை - பாம்பு சித் திரை - திங்கள் சாரைப்பாம்பு சித் திரைத் திங்கள் = 8. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: நில்லா - பொழுது = நில்லாப்பொழுது ஒடா - புலி = ஓடாப் புலி 9. தனிக்கறி இலச் சார்ந்த முற்று கரங்களின் முன் வல்லினம் மிகும். எ-டு: புது - பார்வை = புதுப்பார்வை உரு-கண்டான் = உருக்கண்டான் வடு - பட்டது = வடுப்பட்டது 10. தி, பூ, ஈ என வரும் ஒரெழுத்தொருமொழி யின் முன்னும் வல்லினம் மிகும்.