பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q8 ண்ம்ை' என்ற செய்யும் என்னும் வாய் பாட்டு முற்றுவிருதி, நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பொதுவினையாக வரும். 'உண்ணு' என்னும் எதிர்மறை, முக்காலத் திற்கும் பொதுவினையாக வரும். (தன் வினைக்கும்-பிறவினைக்கும் பொதுவினை) வெளுத்தான் என்பது, தான் வெளுப்படைக் தான் என்றும், தான் பிறிதொன்றை வெளுப் படையச் செய்தான் என்றும், தன்வினைக்கும், பிறவினைக்கும் பொதுவினையாக வரும். (உடன்பாட்டிற்கும்-எதிர்மறைக்கும் பொதுவினை) ‘சாவான்’ என்பது இறப்பான் என்றும், இறக்க மாட்டான் என்றும் உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பொதுவினையாக வரும். (செய்வினைக்கும்-செயப்பாட்டுவினைக்கும் பொதுவினை) ‘புலி கொன்ற யானை' என்பது, புலியைக் கொன்ற யானை என்றும், புலியால் கொல்லப்பட்ட யானை என்றும் செய்வினைக்கும், செயப்பாட்டு. வினைக்கும் பொதுவினையாக வரும். (பெயரெச்சத்திற்கும், வினையெச்சத்திற்கும் பொதுவினை) தேடிய சாத்தன்-தேடிய வந்தான்’ என்ப வற்றிலுள்ள தேடிய என்பது, பெயரெச்சம்,