இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51
இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும்,செய்யும் என்னும் வாய்பாட்டு 'உம்' என்னும் முற்று விகுதி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும், எதிர்மறை ஆகார விகுதி முன்று காலங்களையும் உணர்த்தும்
- றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவுந்
- தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு
- கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல்
- வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தஞ்
- செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும்
-
- (ந-நூற்பா 145.)
7. சினைவினை - முதல்வினை
- இராமன் விழுந்தான்.
- இராமன் கால் முறிந்தது.
- இராமன் கால் முறிந்து விழுந்தது.
- இராமன் கால் முறிந்து விழுந்தான்.
- 'இராமன் விழுந்தான்'என்ற தொடரில்,
விழுந்தவன் யார்? இராமன்.எனவே, இராமன் என்பது முதற்பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகும்.விழுந்தான் என்பது அம் முதற் பொருளின் தொழிலைக் குறிக்கும் வினைச் சொல் லாகும். இங்கு விழுந்தான் என்பதிலுள்ள 'விழுதல்'முதற்பொருளின் தொழிலைக் குறிக்கும் வினையாதலால்,அது முதல்வினை எனப்படும்.