பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இவ் வெடுத்துக்காட்டுக்களில் உள்ள பொன் னன், கண்ணன் என்பன வினைமுற்றுக்களாகும். ஆல்ை, இவை கருத்தாவை மட்டும் உணர்த்தித் தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டவில்லை. எனினும், பொன்னே உடையவனுக இருந்தான்; இருக்கின்றன்; இருப்பான் எனவும், கண்ணே உடையவனுக இருந்தான்; இருக்கின் ருன்; இருப்பான் எனவும் பொருள்தரும்பொழுது, குறிப்பால் முக்காலத்தையும் காட்டும். இங்ங்னம், கருத்தாவை மட்டும் உணர்த்தித் தொழிலையும், காலத்தையும், பிறவற்றையும் வெளிப்படையாக உணர்த்தாமல், குறிப்பால் உணர்த்துவன குறிப்புவினே' எனப்படும். அக் குறிப்புவினை, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களின் அடியாகப் பிறக்கும். குழையன்-பொருள் அடியாகப் பிறந்த குறிப்பு வினை. (குழை-காதணி) ஊரன்-இடம் அடியாகப் பிறந்த குறிப்புவி?ன. ஆதிரையான்-காலம் அடியாகப் பிறந்த குறிப்புவினை. செங்கண்ணன்-சினை அடியாகப் பிறந்த குறிப்புவினை. கரியன்-பண்பு அடியாகப் பிறந்த குறிப்புவினை. இன்சொல்லன்-தொழில் அடியாகப் பிறந்த குறிப்பு வி2ன. 1றிப்பு வினைகளில், விகுதியினுல் செய்பவன் (கருத்தா) மட்டுமே விளங்கும். ஏனைய குறிப் பாகவே விளங்கும்.