பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முன்? என்று வினவில்ை, அதற்கு விடை இல்லை. எனவே, சென்றன் என்ற வினைக்குச் செயப்படு பொருள் இல்லை. எனவே, தெரிநிலைவினை செயப்படுபொருள் பெற்றும், பெருமலும் வரும். செயப்படுபொருள் பெற்ற வினை, செயப்படுபொருள் குன்ருவினை: என்றும், செயப்படுபொருள் பெருத வினை, "செயப்படுபொருள் குன்றியவி2ண்’ என்றும் கூறப்படும். உண்டான், படித்தோம், கண்டேன் இவையும், இவை போல்வனவுமாகிய வினைச்சொற்கள் செயப்படுபொருள் குன்ருவினை எனப்படும். நடந்தான், வந்தான், பறந்தது இவையும், இவை போல்வனவுமாகிய வினைச் சொற்கள் செயப்படுபொருள் குன்றியவினை எனப்படும். இலக்கண விதி: கருத்தாவும், கருவியும், இட மும், செயலும், காலமும், செயப்படுபொருளு மாகிய அறுவகைப் பொருளையும் தருவது தெரி ாநி2ல வினை ச் சொல்லாகும். செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம் செய்பொரு ளாறுந் தருவது வினையே. (ந-நூற்பா 320.) (2) குறிப்புவினை இவன் பொன்னன் அவன் கண்ணன்