பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்து ர் வளம் 12; " _ கருத்து அன்னப் பறவைகள் தாழை மடலே எடுத்துக் குழந்தையாகக் கருதி, சீராட்டிப் பாலூட்டித் தாமரையில் தாலாட்டுதற்கு இட மான திருச்செந்துார். ஆண் நாரை தன் பெண் நாரைக்கு அலகு திறந்து இரையூட்டும் காட்சி நிறைந்த திருச்செந்துரர். வண்மை யும் புதுமையும் நிறைந்த தி ரு ச் செ ந் துார். அப்பதி வாழும் முருகனே வருவாயாக. விளக்கம் இப்பாடலில் திருச்செந்துாரின் வளம் கூறப்படுகிறது. தாழை, சுரிசங்கு இவை கூறப்படுவதால் கடற்கரையிலுள்ள திருச்செந் துாரின் நெய்தல் வளமும், அன்னம், குவளை, தாமரை இவை கூறப் படுவதால் அதன் மருத வளமும் கூறப்படுகின்றன. - தாழை மடலைக் குழந்தை என மயங்கிய அன்னங்கள் மடி யிருத்தி, பாராட்டி, குவளைத் தேகிைய பாலூட்டி, து யி ல த் தாலாட்டின எனத் தாய்மைப் பண்பை அழகுறக் காட்டுகி ருர் ஆசிரியர். அஃறிணைப் பொருள்களாயினும் இவ்வூர்க் குருகுகள் காதற் பண்பும், பரிவும் உடையன என்பது தோன்றப் பெட் பினின் இனிது அளிக்கும்” என்ருர். அஃறிணையாகிய அன்னம் மடலிடத்துத் தாயன்பு காட்டு கிறது; ஆண் குருகு தன் பெண் குருகிடம் காதலன்பு காட்டுகிறது என்ருல் உயர்தினையாகிய மக்களிடம் உள்ள மனவளம் கூருமலே அமையும் இத்தகைய ஈத்துவக்கும் பண்பும் வியத்தகு காட்சியும் கொண் டமையால் 'வண்மைப் புதுமைத் திருச்செந்துார் ” என்ருர், இலக்கணம் சிறைப்புள் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புள்ளோதிமம்-இருபெயரொட்டுப் பண்புத் தொகை. சுரிசங்கு-வினைத் தொகை. செழுந்தாமரை-பண்புத்தொகை. நெட்டிதழ்-பண்புத்தொகை. சேவல்-ஆண்மையைக் குறிக்கும் மரபுப் பெயர். செழுந்தாமரை-செழுமை-தாமரை. நெட்டிதழ்-நெடுமை-இதழ். முகந்து-முக-த்-த்--உ. முக-பகுதி, த்-சந்தி, சந்தியாக வந்த தகரம் நகரமானது விகாரம், த்-இறந்த கால இடை நிலை, உ-வினையெச்ச விகுதி.