உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னிசைப்பாக்கள் 127 கருதது ஆதி வேதம் பயந்தவனே, மலர் மழை பெய்ய அமைந்தவனே, நீதிநெறி உணர்ந்தவனே, நிகரில்லாப் ப்ெருஞானம் உடையவனே, உலகத் தலைவனே உன் திருவடி தொழும் எங்களுடைய பிறவித் துயருக்குக் காரணமான பற்றுக்களை நீக்கியருள்வாயாக. == விளக்கம் வேள்வியின் பெயரால் கொலையை ஆதரிக்கும் வேதங்களும் உள. அவற்றிலிருந்து வேறு பிரித்துக்கூற ஆதிவேதம்’ என்பதற்குக் கொலை முதலியன இல்லாத வேதம் என்ப்பொருள் உரைக்கப் பட்டது: அருக வேதம் அதை விலக்குவதால், காட்சி என்பது பேரறிவு. இறைவன் வாலறிவன் ஆதலின் நிகரில் காட்சிக் கிறையோய்” என்ப்பட்டான். பிறவி குற்றங்களைச் செய்வதற்கு ஏதுவாக இருத்தலினுல். தவை செய் பிறவி' என்ருர். கடத்தற்கரியதாகலானும், அளவிட்டுக் கூற முடியாதாகலா னும் பிறவி, கடல் எனப்பட்டது. பிறவிக்குப் பற்று, காரணமாக இருப்பதால் பசையாப்பவிழ' என்ருர். பற்றில்ை பிறவியும் பிறவியால் பற்றும் மாறி மாறித் தொடர்ந்து தொடர் சங்கிலி போல் வருவதால் பசையை(பற்றை) "யாப்பு’ என்ருர். - பிறவிக் கடலை நீந்துவதற்கு இறைவன் அடியே புணையாகும் என்னுங் குறிப்பைப் பாத கமலந் தொழுவேங்கள்’ என்பதால் வெளியிடுகின்ருர். பசையை யாப்பு எனக் கூறிய தற்கேற்ப அது நீங்குதலை 'அவிழ என்ருர், இலக்கணம் பிறவிக் கடல்-உருவகம். பாத கமலம்-உருவகம். F யாப்பு-உருவகம். பயந்தோய்-பய-த்-த்+ ஆய், பய-பகுதி, த்-சந்தி, இது நகரமானது விகாரம், த்-இறந்த கால இடைநிலை, ஆய்முன்னிலே ஒருமை விகுதி. விகுதியிலுள்ள் ஆகாரம் ஒக்ார 1ாகத் திரிந்தது. 2 பண்ணிடை.................................நீயன்றே இப்ப சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் திருக் குருகா ஆ1 . . . டை’’ என்ற தலைப்பில் உள் ளது. ஒரு சமயம் இவர் 8 ' இறைவனை வணங்கி விட்டு திருச்குருகாவூரைத் தொழுவதற்குத் தம் அன்பர்களுடன் போய்க் கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்குப் பசியும் தாகமும் அதிகமாயின். இதை