பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழரும் 13.9 தமிழர் தலம் பெற வேண்டுமானல் தெருவெங்கும் தமிழ் முழங்க வேண்டும். முழங்காவிடின் அவர்கள் வாழ்வு விடியாது என்றும் மனம் நொந்து பாடுகிருர். சேமம்-நலம். இலக்கணம் இ-ைஇடைக்குறை. 3. திருவள்ளுவர் திருவள்ளுவரைப் பற்றி வருகின்ற இவ்விரு பாடல்களும் பாரதிதாசன் கவிதைகள்-( இரண்டாம் தொகுதி ) என்னும் துாவில் வள்ளுவர் வழங்கிய முத்துக்கள் என்னும் தலைப்பில் வரு வனவாம். ". ஆசிரியரைப்பற்றி: பெயர் : பாரதி தாசன். இயற் பெயர் : கனக சுப்பு ரத்தினம். ஊர் : புதுச்சேரி. தத்தை : கனகசபை முதலியார். காலம் : 1891 ஏப்பிரல் 29ல் பிறந்தார். பிறநூல்கள் : குடும்ப விளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம், சேரதாண்ட வம் முதலிய நூல்கள்.

  • இவர்பாரதிபரம்பையில் தலைசிறந்தவராவர். அவரோடு நெருங்

கிய தொடர்புடையவர். அவர்பால் கொண்ட பேரன்பு காரண மாகத் தமது பெயரை பாரதிதாசன் என வைத்துக் கொண்டார். இவர் தம் பாடல்கள் புரட்சிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனுல் புரட்சிக் கவிஞர் எனப்பட்டார். தமிழைப் பற்றி இவர் பாடுமிடமெல்லாம் இனிக்கும். பகுத்தறிவுப் பணி யில் பெரும் பங்கு கொண்டவர். சமுதாயச் சீர்த்திருத்தத்தில் பெரும் நாட்டம் கொண்டவர். நாடு, மொழி, இனம் இவற்றிடம் நீங்காப் பற்றுக் கொண்டவர். இவர்தம் பாடல்கள் சில கனல் கக்கும் சில தென்றலென வீசும் ; சில தேன் என இனிக்கும். அனைவராலும் ஒருமுகமாகப் பெருங்கவிஞர் என்று பாராட்டப் பட்டவர்.