பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f0 அறவுரை வள்ளல் மன்னர்-உம்மைத்தொகை. பைந்தமிழ்-பசுமை--தமிழ். நன்னடு-நன்மை-நாடு, நல்-நாடு. 11. அறவுரை - மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படத் தக்க நல்ல அறவழிகளே. எடுத்துக் கூறுவது. இத்தகு உயர்ந்த அறநெறிகளை விளக்கிக் கூறும் நூல்களுள் புறநானூறு, திருமந்திரம், திருக்குறள், பழ மொழி ஆகிய நான்கு நூ ற் ப கு தி க ள் இங்குப் பாடமாக அ. புறகானு று புறம்--நானுாறு. புறப் பொருளைப் பற்றிக் கூறும் நானுாறு பாடல்களைக் கொண்ட நூலாதலின் புறநானுாறு என்னும் பெயர்: பெற்றது. இது எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று; பல காலத்தி ருந்த பல புலவர்களால் பாடப்பட்ட பாடல்களால் தொகுக்கப் பட்டது. புறப்பொருள் என்பது வீரம், கல்வி, கொடை முதலிய வற்றைக் குறிக்கும். எட்டுத் தொகை நூல்களாவன : 'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு ஒத்த பதிற்றுப்பத்து ஒங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை' - இந்நூல் புறம் எனவும் புறப்பாட்டு எனவும் வழங்கப்பெறும். பண்டைய பேரரசர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள், புலவர்கள் வரலாறு இந்நூலிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. அக்கால மக்க: வளின் நாகரிகம், பழக்க வழக்கம், அரசியல் முறை முதலியனவும் இந்நூலால் அறியப்படுகின்றன. தினை என்பது மக்கள் ஒழுக்கம், துறை என்பது மக்கள், ! விலங்கு முதலியன சென்று நீருண்ணும் நீர்த்துறைபோலப் பல வகைப்பட்ட பொருள்களும் ஒருவகைப்பட்டுச் செல்லுதற்குரிய வழி எனப் பொருள்படும். அஃதாவது மக்களின் வாழ்க்கைக்குரிய, வழி. இத்துறைகள் அத்திணைக்குச் செல்வதற்குரிய வழிகள். தினை அகத்தினை எனவும் புறத்தினை எனவும் இருவகைப் படும். இங்கு வரும் திணை புறத்திணையேயாகும். "உற்றுழி உதவியும்’ என்று தொடங்கும் இப்பாடல் பாண் டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு. இவன், கற்ருே.ரிடத்துப் பெருமதிப்புடையவன் என்பதும், கற்றலேயே பெரும் பயனுகக் கருதியவன் என்பதும் இவனுடைய பாடலால் விளங்கும். ப்ாடல் இயற்றும் பெரும் புலமையும் பெற்றிருந்தான் என்பதும் புலனுகும். இவன்தான் கோவலனைக் கொல்வித்தவன் எனக் கூறுவர்.