உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பொதுச் செய்யுள் வினவிடை-அறவுரை - --- _ அந்தப் பாவி, இப்பிறப்பிற் செல்வத்தைக் கெடுத்து, மறுமையில் நரகத்திலும் செலுத்தி விடும். இவையே அழுக்காற்றில்ை விளையும் தீமைகள். 5. தீயவை தீயினும் அஞ்சப்படக் காரணம் என்ன ? தீயவை தீயைப்போலத் தொட்ட இடத்தில், தொட்ட சமயத் தில் தொட்ட உடம்பைச் சுடாமல் இறந்த பிறகும் பிறிதொரு காலத்தும் பிரிதொரு தேயத்தும் பிறிதோருடம்பிலும் சென்று வருத்துவதால் அவை தீயினும் அஞ்சப்படும். 6. தீயவை செய்தார் கெடுதலை எவ்வாறு உறுதிப்படுத்து கிருர் ? இச் செய்யுளில் அமைந்த அணி யாது ? o ஒருவனுடைய நிழலானது நெடிதாகப் போயும் அவனை விட்டு நீங்காமல் வந்து அவன் காலடியிலேயே தங்கிய தன்மை போல, ஒருவர் செய்த தீமைகளும் அவரை விட்டகலாது அவரையே வந்தடைந்து துன்பந் தரும் என்று உறுதி செய்கிரு.ர். இச் செய்யுளில் அமைந்துள்ள அணி உவமை யணியாகும்.

  • # -- Th o o == - - 7. மதகளாயூத, தோன்றுவார் எவவாறு தோன்ற

வேண்டும் ? மக்களாய்ப் பிறப்பவர்கள் புகழுக்கு ஏதுவாகிய குணங் களுடன் தோன்ற வேண்டும். அக்குணம் இல்லாதவர் மக்களாய்ப் பிற்ப்பதைவிட விலங்காய்ப் பிறப்பது நன்று. 8. வாழ்வார் யார் ? வாழாதார் யார் ? புகழுண்டாகும்படி வாழ்பவர்களே உயிருடன் வாழ்பவராவர்: பழியுண்டாகும்படி வாழ்பவர்கள் இறந்தவர்களே யாவார்கள். 9. குடிகள் கோல் நோக்கி வாழ்தலுக்குக் கூறப்பட்ட உவமை யாது? இஃது எவ்வணியின்பாற்படும்? உலகத்து உயிர்களெல்லாம் மழையை நோக்கி வாழ்தல், குடிகள் கோல் நோக்கி வாழ்தலுக்கு உவமையாகக் கூறப்பட்டது. இச்செய்யுள் எடுத்துக் காட்டுவமையணியின் பாற்படும். 10. அரசனைக் காப்பது எது எந்த அரசனே அது காக்கும் ? குறைவு நேரக்கூடிய காலத்திலும் குறைவு நேர்ந்துவிடாமல் செலுத்தக்கூடிய செங்கோன்மை, அரசனேக் காக்கும். அஃது இந்த உலகம் முழுவதையும் நன்கு காக்கின்ற அரசனைக் காக்கும். 11. அறிவுடையார் நட்பும் அறிவிலார் நட்பும் எத்தகை யன ? o அறிவுடையவர் நட்பு பிறை நிலாவைப் போல நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருந்தன்மையது. அறிவிலார் நட்பு முழு நிலா தேய்வதைப் போல நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருந் தன்மையது. - -