பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் வினவிடை-திருக்குறள் 15 s 12. நட்பின் இலக்கணம் யாது ? இப்பாடலில் வந் துள்ள அணி யாது ? பலர் முன்னிலையில் ஒருவனுக்கு ஆடை குலையும்பொழுது அவ னுடைய கை அவன் மனம் எண்ணு முன்பே விரைந்து சென்று உதவுவதுபோல ஒருவன் தன் நண்பனுக்கு இடுக்கண் வந்த பொழுது தன்னியல்புணர்ச்சியால் விரைந்து வந்து உதவுவதுதான் நட்பாகும். * இச் செய்யுளில் அமைந்துள்ள அணி உவமை யணியாகும். 13. யாக்கைக்கு எப்பொழுது மருந்து வேண்டா ? முதலில் உண்ட உணவு நன்கு செரித்துவிட்டது என்பதைக் குறிகளால் கண்டு பிறகு உணவை உட்கொண்டால் அந்த யாக் கைக்கு மருந்தென வேண்டாவாம். 14. மருத்துவர் கைக்கொள்ள வேண்டிய வழிகள் யாவை ? நோயாளியின் நோயைக் குறிகளினலே இன்ன நோய் எனத் துணிதலும், பின் அந் நோய் வருதற்குரிய காரணத்தை ஆராய்ந் தறிதலும், அதைத் தீர்ப்பதற்குரிய வழிகளைத் தெளிதலும், தெளிந்து அவற்றைச் செய்யும்பொழுது தப்பாமற் செய்தலும் மருத்துவர் கைக்கொள்ள வேண்டிய வழிகளாம். 15. மானம் குன்றும்படியான செயல் வந்தால் யாது செய்தல் வேண்டும் ? மானங் குன்றும்படியான செயல்கள் வருமானுல் அவை எவ் வளவு இன்றியமையாதவையாக இருந்தாலும் அவற்றைச் செய் யாமல் விட்டுவிட்டு, மானத்தையே காத்தல் வேண்டும். 16. கவரிமாவைப் போன்றவரின் இயல்பு யாது ? தம் மயிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கினலும் உயிர்வாழாத கவரி மாவைப் போன்ற பெரியோர்கள் மானம் குன்றும்படியான ஒரு நிலே வருமானுல் தம்முடைய உயிரைவிட்டு மானத்தைக் காத்துக் கொள்ளும் இயல்புடையவர்கள். 17. உலகம் உளதாதற்குக் கூறப்படும் காரணமென்ன? அஃதில்லையேல் என்னுகும் ? இவ்வுலகம் பண்புடைய ர் வழி வருவதால் உளதாக இருக் கிறது. அஃதில்லையாயின் இவ்வுலகம் மண்ணின்கட் புகுந்து மாய்ந்துவிடும். 18. மக்கட் பண்பில்லாதரர் எதனைப் போல்வர் ? இத * னுள் அமைந்த அணி யாது ? மக்கட் பண்பில்லாதவர்கள் அரம்போன்ற கூர்மையான அறிவு படைத்திருப்பினும் ஒரறிவு படைத்த மரத்தினைப் போல்வர். இச் செய்யுளில் உவமையணி அமைந்துள்ளது.