பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பொதுச் செய்யுள் விவிைடை வாகும் என்று கருதி, ஆவ்வடியவர் தம்மை நாடி வந்த போது வேண்டிய வெல்லாம் கொடுத்து வந்தார். மெய்ப் பொருளார் இவ்வண்ணம் வாழ்ந்து வந்தார். 4. மெய்ப் பொருளாரை வெல்ல முத்தநாதன் செய்த சூழ்ச்சி யாது ? முத்தநாதன் என்ற பகையரசன் மெய்ப் பொருளாரை வெல் லக் கருதிப் பல முறை படையெடுத்து வந்தான். போரில் யானைப் படை குதிரைப் படை முதலிய எல்லாப் படைகளையும் இழந்து தோற்று ஓடினன். பல முறை இவ்வாறு அவமானப் பட்டுப் போன் முத்தநாதன் எப்படியும் மெய்ப் பொருளாரை வெற்றி கொள்ள வேண்டு மென்று முடிவு செய்து, மெய்ப்பொருளார் அடியவர்.பால் கொண்ட பக்தியை அறிந்து, அந்த அடியார் வேடமே பூண்டு. தக்க சமயமறிந்து-அவரைக் கொல்ல நினைத்துக் கொடிய எண்ணத் துடன் திருக்கோவலூரை அடைந்தான். 5. முத்தநாதன் தவவேடங் கொண்டதை ஆசிரியர் என் எவ்வாறு கூறுகின்ருர் ? முத்தநாதன் உடம்பெல்லாம் வெண்ணிறு பூசி, தலையில் சடை தளே ஒன்முகச் சேர்த்து முடித்து, உடைவாளை மறைத்து வைத் திருக்கும் புத்தகக் கவளியைக் கையில் தாங்கிக் கொண்டு, புகை யைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் விளக்கைப்ப்ோல மனத்துக்குள்ளே வஞ்சகத்தை மறைத்து வைத்துப் பொய்த்தவ வேடங் கொண்டான் என ஆசிரியர் கூறுகின்ருர். 6. தவவேடம் புனைந்த முத்தநாதன் மெய்ப் பொருளார் அரண்மனைக்குள் எவ்வாறு புகுந்தான் ? பொய்வேடங் கொண்ட முத்தநாதன் அரண்மனை வாயிலே அடைந்தவுடன் இரயில் காப்போர் அவனைக் கண்டு கை குவித்து வணங்கி ஒதுங்கி நின்று, சிவனடியார் கருணையால் தாமாகவே வத் துள்ளார் என்று சொல்லி, உள்ளே எழுந்தருள்க’ என வேண்ட், அவன் பல வாயில்களையும் கடந்து உள்ளே சென்ருன். தாயனுர் இருக்கும் இடத்திலுள்ள உயிர்க்காவலன் தத்தன் என்பான் 'அரசர் துயில்கின்ருர், தாங்கள் காலமறிந்து செல்லவேண்டும்: என்ருன் அதற்கு முத்தநாதன் நான் அரசனுக்கு உறுதிமொழிகள் கூற வந்துள்ளேன்; நீயும் தடை செய்யாது நில்’ என்று அவனைத் தடுத்துக் கூறி உள்ளே சென்ருன், 7. மெய்ப் பொருளார் முத்தநாதனைக் கண்டு வணங்கிக் கேட்க முத்தநாதன் கூறியன யாவை ? முத்தநாதன் மெய்ப் பொருளார் துயிலும் இடத்தை யணுக நாயனர் மனைவி விரைந்து கட்டிலிலிருந்து இறங்கி அரசனை எழுப்ப, அரசன் கண் விழித்து முத்தநாதனைக் கண்டு சிவனடியா எனக் கருதிக் கை குவித்து வணங்கித் தாங்கள் இங்கு எழுந்தருளி