பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கம் உற்றுழி உதவுதலாவது ஆசிரியர் வாழ்க்கையில் ஏதேனும்: ஓரிடுக்கண் வருமாயின் ஒடிச்சென்று தான் முன்னின்று அவ்விடுக் கண் வாராமல் தடுத்துக் காப்பது. உறுபொருள் கொடுத்தலாவது, ஆசிரியர் வறுமையால் வாடா மல் இருத்தற்பொருட்டு நிரம்பச் செல்வம் தந்து உதவுவது. வறு: மையில் வாடும் ஆசிரியரிடத்தினின்றும் மாணவன் நல்ல கல்வி யைப் பெற முடியாதல்லவா? நல்ல கல்வியைப் பெற விரும்பும் சமுதாயம் ஆசிரியர்களே வறுமைக்கு ஆட்படுத்திவிடக் கூடாது. என்பது கருத்து - பிற்றை நிலையாவது, ஆசிரியர்க்கு வேண்டிய பணிவிடை: களைச் செய்தல். இப்பணியில் மனங்கோளுது மாணவன் ஈடுபட வேண்டும். இங்கே 'நிறைந்த நெஞ்சமோடு, எத்திறத்து ஆசான், உவக்கும் அத்திறத்து, அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே." என்பது நோக்கத்தக்கது. - கற்கப் புகும் நன் மாளுக்கர் கையாள வேண்டிய வழிமுறை கள் கூறப்பட்டன. தாய், தான் பெற்ற எல்லாக் குழந்தைகளிடமும் ஒரே தன் மைத்தாகிய அன்பு செலுத்தும் இயல்புடையவள். புடையவள்.கூட, கற்ற பிள்ளையிடம் தனியன்பு காட்டுவாள் என் பதை விளக்கத் 'தாயும் மனந்திரியும்' என்ருர். மனம் திரிதலா வது மிகுந்த அன்பைக் காட்டுவது. - o அரசன் செல்லும் வழியிற்ருன் மக்கள் செல்வர். ஆயினும்: அறிவுடைய ஒருவன் சொல்லை மதித்து அவன் வழியே அரசனும்: செல்வான் என்பதைக்காட்ட 'அரசும் செல்லும்’ என்ருர், அறி: வுடைய ஒருவன் ஆண்டில் இளைஞனயினும், அவனினும் மூத்தார்: இருப்பினும் அறிஞனையே அரசன் மதித்து நடப்பான் o: “மூத்தோன் வருக என்னுது’’ என்பதல்ை பெறப்படுகின்றது. உடன் வயிறு என்பது ஒரு தாய் வ யி ற் றி ல் பிறந்தவரைக்! குறிக்கும். -- o பிறவியினல் கருதப்படும் உயர்வு தாழ்வு கல்வியினல் ஒழிக் கப்படும் என்பது தோன்ற மேற்பால் ஒருவனும் ఆమె ఉత్య படுமே” என்ருர். o கல்வியில்ை வீட்டில் மதிப்பு, நாட்டு அரசியலில் மதிப்பு, சமுதாயத்தில் மதிப்பு அடைய முடிகிறது; அதல்ை ஒருவன்: முயன்று கல்வி பெறவேண்டும் என்பதை இப்பாடல் நன்கு வலி யுறுத்துகின்றது. o இலக்கணம் உற்றுழி-உற்ற+உழி. அகரம் தொகுத்தல் விகாரம். உறுபொருள்-உரிச்சொற்ருெடர். பிற்றை நிலை-காரணப் பெயர். தாயும், அரசும்,-உயர்வு சிறப்பும்மைகள்.