I66 பொதுச் செய்யுள் விவிைடை இருக்கிற உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் என்னையும் காட் டிற்கு அழைத்துச் செல் என்று கோசலை கூறினுள். 15. என்னையும் அழைத்துச் செல் என்று கூறிய கோச லையை இராமன் எவ்வாறு தேற்றினன்? தாயே என்னைப் பிரிந்து துன்பக் கடலுள் மூழ்கும் அரசருக்கு வற்புறுத்தி ஆறுதல் கூருமல் என்னுடன் காட்டிற்கு வருகிறேன் என்று துணிந்து கூறலாமா? கணவனுக்கு மனைவி ஆற்றவேண்டிய அறத்தைப் பார்க்காமல் பேசுகின்ருயே! நீ ஏன் மனம் கலங்குகின்ருய்? தேவர்களுங்கடத் தவஞ்செய்து தானே உயர்வடைந்தார்கள். நான் காட்டில் தங்கவேண்டிய ஆண்டுகள் எவ்வளவு உள்ளன. பதின்ைகு ஆண்டுகளும் எனக்குப் பதின்ைகு பகல்கள் அல்லவா ? முன்பொரு சமயம் கோசிகமுனி வருடன் சென்று அவரருளால் நான்பெற்ற வித்தைகளும் அதன் பின் நான் அடைந்த பேறும் பிழைத்தா போய்விட்டன. இன் இலும் அத்தகைய முனிவர்க்குப் பணிவிடை செய்தல் நல்ல்தே யாகும் என்று இராமன் கோசலையைத் தேற்றினன். 16. இடஞ்சுட்டுக. அ. கூற்றெனத் தமியள் வந்தாள்’ ஆ. தாயைக் கண்ட ஆன்கன்றின் அன்னன்’ இ. ஒன்றி வாழுதி ஊழிபல' ஈ. கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக்கலங்கிளுள்' உ. அன்னையே அறம் பார்க்கிலை’ அ. கூற்றெனத் தமியள் வந்தாள்’ இஃது இராமன் தயர தனத் தேடி, அவனிருக்கும் இடத்தை பிறிந்து, கைகேயியின் ஆரண்மனைக்கு வரும்பொழுது அவளே அவனுக்கு எதிரில் வரு கிருள். அவள் வருவதைக் கூற்றெனத் தமியிள் இந்தர்ள்’ எனக் கம்பர் கூறுகிரு.ர். ஆ. தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னன்’ கைகேயி தான் பெற்ற அரங்களைத் தயரதன் இராமனிடம் கூருன் என்று கருதி அவளே சொல்லக்கருதி அவனை எதிர் நோக்கிவருகின்ருள். அவ னேக் கண்ட இராமன் நிலையைத் தாயைக்கண்ட் ஆன்கன்றின் அன்ன்ை’ என்று கம்பர் கூறுகிரு.ர். ஒன்றி வாழுதி ஊழி பல இது கோசலையின் கூற்று. இராமனை நோக்கிக் கூறியது. முடிசூட்ாமல் வந்த இராமன் கோசலையிடம் பரதன்தான் முடிசூடுகின்ருன் என்று கூறிய பொழுது கோசலை ஒன்றி வாழுதி ஊழிபல’ எனக் கூறுகின்ருள். ஈ. கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கலங்கினுள் இராமன் கோசலையிடம் தன்னைப் பதிஞ்ன்கு ஆண்டுகள் காட்டிற்குச் செல்லு
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/170
தோற்றம்