உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£7-f பொதுச் செய்யுள் வினவிடை 2. குருகின் செயலாகப் பகழிக்கூத்தர் கூறுவதை வரைக. ஆண் குருகு தன் பெட்டைக் குருகுக்குத் தன்வாயிலே கொண்ட இரையை, அதன் கூரிய அலகுகளைப் பிளந்து விருப்பத்துடன் உண் பிக்கின்றது என்று பகழிக் கூத்தர் கூறுகிருர், 3. திருச்செந்துாரின் இயற்கை எழிலைப் பகழிக்கூத்தர் எங்ங்னம் வருணிக்கின்ருர் ? இவ்விவிைற்கு விடையாக முதலிரண்டு வினுக்கட்குரிய விடை களையே தொகுத்துக் கூறிக் கொள்க. 4. இலக்கணக் குறிப்பு வரைக. சிறைப் புள்ஓதிமங்கள் - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை திண்மைச் சுரிசங்கு-வினைத்தொகை. பிரித்தெழுதுக. செழுந்தாமரை-செழுமை--தாமரை. நெட்டிதழ்-நெடுமை-இதழ். உறுப்பிலக்கணந் தருக. முகந்து-முக-த்(ந்)--த்--உ. முக-பகுதி. த்-த்தி, நகர மானது விகாரம், த்-இறந்த கால இடைநிலை, உ-வினை யெச்ச விகுதி. o 5 6. 3. மலரும் மாலையும் 1. கவிமணி வெண்ணிலாவை நோக்கிக் கூறுவனயாவை? கோடிவிண்மீன்கள் சூழ்ந்துவர ஒரு வெள்ளி ஒடம்போல வரு கின்ற வெண்ணிலாவே கதிரவனுடைய செங்கதிர்களில் குளிக்கும் நீ நாடோறும் பாற்கடலிலும் மூழ்குவாயோ ஆம்பல் மகிழும்படி யாக வரும் நீ, தாமரை குவியும்படியாக வருகின்ருயே அஃது உனக் கென்ன தீமை செய்தது ? இரவையும் பகலாக்குகின்ருயே! உன்னை இராகு விழுங்கிடுமோ ? வளர்ந்துகொண்டே வரும் நீ மீண்டும் வாடி வாடிப்போவதன் காரணம் என்ன ? கூகை ஆத்தை இவற் றைப்போல தீ பகற்பொழுதில் கூட்டுக்குன் உறங்குவாயோ ? என்று கவிமணி வெண்ணிலாவை நோக்கிக் கூறுகின்ருர், 2. இலக்கணக் குறிப்பு வரைக. கோடி கோடி-அடுக்குத்தொடர். வெள்ளியோடம்-மூன்ரும் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.