188 பொது உரைநடை விவிைடை 13. உடற் சுகத்தைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியவை யாவை ? நலமுள்ள உடலில் தான் நலமுள்ள மனம் வாழும். ஆகவே நலத்தைக் கெடுக்கும் பழக்க வழக்கங்கள், கொள்கைகள், உண் னும் உணவு, உறையுமிடம், பருகும் நீர், அணியும் ஆடை, நோய்க்குக் காரணமான அணுக்கள், அவற்றைத் தவிர்க்கும் முறை கள், நோய் வந்த பொழுது எடுத்துக் கொள்ள் வேண்டிய நடவடிக் கைகள், நோயுற்றவர்களைக் காக்கும் முறைகள் ஆகியவற்றை நாம் கவனிக்க வேண்டும். 14. குழந்தை வளர்ப்புத் துறையில் நாம் கையாள வேண்டிய முறைகள் யாவை ? . குழந்தைகளே வீரத்துடனும், ஆண்மையுடனும், உண்மையுட லும், வளர்க்க, இளம் பருவத்திலேயே நல்ல சூழ்நிலைகளே அமைத் துத் தர வேண்டும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி உள்ளத்து வளர்ச்சிகளிலுள்ள பருவங்கள் மாறுதல்கள் இவற்றை யறிந்து, அவர்கட்கேற்ற உணவு, உடை, உறையுள், நல்ல பழக்கங்கள், விளை யாட்டு, கல்வி முதலியனவற்றைத் தெரிந்து கொண்டு அம் முறை யில் வளர்க்க வேண்டும். இவையே குழந்தை வளர்ப்புத் துறை யில் நாம் கையாள வேண்டியவையாகும். 15. மனையியல் வாயிலாகப் பெறும் நன்மைகள் யாவை? மனிதன் உலகத்தோடு ஒத்துச் சமூகத்தில் மலர் முகத்துடன் பழகி ஒன்ருகக் கூட்டுறவுடன் காரியங்களைச் செய்ய உதவுவது சமூகப் பந்தங்கள் என்ற துறையாகும். இதனை மனையியற் கல் வியால் பெறுகின்ருேம். மேலும் குடும்ப வாழ்க்கையில் வரக்கூடிய அவசரங்கள், அவசி யங்கள் அனைத்தையும் திறம்படச் செய்யத்தக்க துணிவையும் வல் லமையையும் இம் மனையியல் மூலமாகப் பெறுகிருேம். நற்குண நற்செய்கையால் மேம்பட்ட மனைவியிருக்கும் விட் டில் இல்லாததொன்றும் இல்லை; அஃதாவது எல்லாம் நிை றந்திருக் கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கவும், தன்னைக் காத்துத் தற்கொண் டானப் பேணித் தகை சான்ற சொல்லையும் காத்துச் சோர்வில் இாமல் இருக்கின்ற பெண்மையைக் காக்கவும் மனையியல் உதவு கின்றது. குழந்தை நன்கு வளர்வதற்கும், அன்பு மலர்வதற்கும் முதுமையில் ஒய்வும் நலமும் கிடைப்பதற்கும். பக்தியும் பண்பாடும் சிறந்து ஓங்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் வீட்டை அழகுடன் வைத்துப் பாதுகாக்க உதவுவதும் மனையியற் கல்வியேயாகும்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/192
தோற்றம்