பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய கயம் 189 -- 4. இலக்கிய நயம் 1. அறிஞரின் திறம் வியந்து பாராட்ட ற்குரியது ஏன்? நாம் ஏதேனும் ஒரு நூலைப் படிக்குங்கால், சில சொற்ருெடர் களோ பகுதிகளேர் நம்முடைய மனத்தைக் கவர்கின்றன. அவற்றை நினைக்குந்தோறும் உள்ளத்திற்கும், சொல்லுந்தோறும் நாவிற்கும், கேட்குந்தோறும் காதிற்கும் இன்பம் உண்டர்கிற்து. இத்ததைய இனிய சுவைப் பகுதிகளை ஆங்காங்கே புலவர்கள் அமைத்துள்ளமையால் அவ்வறிஞர்களின் திறம் வி ய ந் து பாராட்டற்குரியதாக இருக்கின்றது. 2. தமது முடி நரைக்காமைக்குப் பிசிராந்தையார் கூறும் காரணங்கள் யாவை ? 1. மாட்திழைப்பட்ட தன் மனைவியும் மக்களும் கல்வியறிவிஞல் திரம்பப் பெற்றனர் என்றும், தன் பணியாளர் குறிப்பறிந்து ஒழுகும் குணமுடையவர் என்றும், தன் நாட்டு மன்னன் நீதிக்இன் புறம்பானவற்றைச் செய்யான் என்றும், அங்கேயுள்ள சான்ருேப் புலனடக்கம் பெற்றவர் என்றும், அதனுல் தமக்கு எவ்விதமான கவலையும் கிடையாதென்றும் பிசிராந்தையார் தமக்கு நரையின் மைக்குக் காரணங்கள் கூறினர். 8. இன்று யாண்டு சிலவாக நரையுளவாதல் யாங்கனம் என்று வினவக்கூடிய நிலை ஏற்படக் காரண மென்ன ? அக்கால மக்கள் போதுமென்ற மனமே பொன்செய்யுமருந்து என்னும் பழமொழிக்கேற்பப் பெற்றதைக்கொண்டு சுற்றம் அருத்தி வாழ்ந்து வந்தனர். இன்ருே தேவைகள் மிகுந்துவிட்டன. அதல்ை கவலகளும் கணக்கிலவாயின. கவலை மிகுந்தமையால் மக்கள் விரைவில் முதுமை பெறுகின்றனர். ஆதலால் யாண்டு சிலவாத நரையுளவாதல் யாங்கனம் ? என வினவும் நிலை ஏற் பட்டுவிட்டது. 4. பேச்சுத் திறமையால் என்ன பயன் விளையும் ? அதை எவ்வாறு கையாள வேண்டும் ? ஒருவர் பேச்சுத் திறமையால் உலகத்தையே தன்வயப்படுத்த லாம். அதனுலன்ருே நா அசைந்தால் நாடசையும், உதடசைத் தால் ஊாசையும்' என்னும் மொழிகள் உண்டாயின. வள்ளுவரும் விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது, சொல்லுதல் வல்லார்ப் பெறின்-என்ருர், அப்பேச்சுத் திறனைக் கையாள வேண்டியமுறை தான்சொல்ல வேண்டியவற்றை ஒழுங்குபடுத்திக் கோவையாகவும், இனிமையா கவும், சுருக்கமாகவும், விளக்கமாகவும், சொற்குற்றம் பொருட்