பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பொது உரைநடை விவிைடை குற்ற மில்லாமலும், முன்னுக்குப்பின் முரண்பாடில்லாமலும் சொல்லுதல் வேண்டும். அத்தகையோரையே அவனியிலுள்ளோர் போற்றுவர். - 5. பேச்சுத் திறனை அடைய வழி யாது உதாரணத் துடன் விளக்குக ? அடிக்கடி பேசிப்பேசி அத்திறனைப் பெறலாம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்னும் பாடலும் இதனையே வலியுறுத்துகிறது. உதாரணமாகக் கிரேக்க நாட்டு 'டெமஸ்தனிஸ்’ என்பவன் தெற்றுவாயனுக இருந்தான். சிறந்த பேச்சாளகை வரவேண்டும் என்ற எண்ணங் கொண்டான். அவன் நாடோறும் கடற்கரைக்குச் சென்று கூழாங்கற்களை வாயில் அடக்கிக்கொண்டு உரத்த குரலில் பேசிப் பழகிக் கொண்டான். அம்முயற்சியால் அவன் பிற்காலத்தில் சிறந்த பேச்சாளனுக விளங்கினன். 6. பேச்சுக்கலை எவ்வாறிருக்க வேண்டும் ? ஒருவர் பேசும் பேச்சானது எவரும் மறுத்துக் கருத வண்ணம் அம்ைந்திருக்க வேண்டும். மேலும், அப்பேச்சைக் கேளாதவர்கள் தாம் கேட்க முடியாமற் போயிற்றே என்று இரக்கங் கொள்ளத் தக்கதாயும் இருக்க வேண்டும். பகைவரும் கேட்டுப் பேச்சில் மயங்கிப் பகையை மறந்திருக்க வேண்டும். இவ்வாறு பேச்சுக்கலை அமைதல் வேண்டும். - 7. சிலப்பதிகாரத்தில் இலக்கிய நயம் அமைந்த ஒரு பகுதியைக் குறிப்பிட்டு விளக்குக. கவுந்தியடிகள் கண்ணகியை மாதரி என்னும் இடைக்குல மடந் தையிடம் ஒப்புவிக்கும் இடத்தில் இளங்கோவடிகள் வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று குறிப்பிடுகின்ருர். இத்தொடர் இலக்கிய நயம் அமைந்ததாகும். அதில் அமைந்த நயமாவது கிண்ணகி வீட்டை விட்டு வெளியிற் சென்றறியாதவள் என்பதும் கொடியவேனிற் பருவத்தில் நடந்து வந்தமையால் கால்கள் கொப் புளித்து அவை நிலத்தில் பதியவில்லை என்பதும், கண்ணகியின் மென்மையைக் கண்டு நிலமகள் குறிஞ்சி, முல்லை முதலிய வலிய நிலப்பகுதிகளை மென்மையாக்கவில்லை என்பதும் ஆம். 8. சீவக சிந்தாமணியில் நயம் அமைந்த ஒரு பகுதியை விளக்குக. சிந்தாமணியில் தக்க நாட்டின் பெருமை கூறுமிடத்து மகளிர் கற்பை ஓர் உதாரண முகத்தால் விளக்குகிருர் ஆசிரியர். அந் நாட்டின் அகழியில் வாழ்கின்ற ஓர் இளைய வாளைமீன், தன் மீது நண்டின் நகம் பட்டுவிட்டதென்று நாணமும் நடுக்கமும் கொண்டு