202 பொது உரைநடை வனுவடை இயக்குகிரு.ர்கள். அது செங்குத்தாக மேலே கிளம்பி 300 மைல் வேகத்தில் 30 மைல் உயரத்தை அடைகிறது. இப்பொழுது முதல் ராக்கெட் இரண்டாவதை இயக்கிவிட்டுக் கழன்று விடும். இரண்டாம் ராக்கெட் சுமார் 45 கோணத்தில் சாய்ந்து செல்லு மாறு அமைக்கப்பட்டிருக்கும். இது 260 மைல் உயரத்தில் செல் லும்போது மணிக்கு 12,000 மைல் வேகத்தில் செல்கிறது. இப் பொழுது மூன்ருவதை இயக்கிவிட்டு இரண்டாவது கழன்றுவிடும். மூன்ருவது ராக்கெட் இன்னும் சிறிது சிறிதாகச் சாய்ந்து கொண்டே சுமார் 560 மைல் உயரத்திற்குச் சென்றதும் 18,000 மைல் வேகத்தில் மட்டமாக இயங்கிக் கொண்டிருக்கும். இப் போது மூன்ருவது ராக்கெட் செயற்கைச் சந்திரனைத் தன் பிடிபி லிருந்து விட்டு விடுகிறது. செயற்கைச் சந்திரன் தன்னந் தனி யாகப் பூமியைச் சுற்றி வட்டமிடுகிறது. 18. செயற்கைச் சந்திரன்கள் என்றும் நிரந்தரமாகப் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்குமா ? சுற்றிக் கொண்டிரா. 1000 மைல் உயரத்துக்குமேல் ஓரள வேனும் காற்று இருக்கத்தான் செய்யும். இதன் காரணமாகச் செயற்கைச் சந்திரனின் (ஸ்புட்னிக்கின்) வேகம் வரவரக் குறையும். இதல்ை அது பூமியை நெருங்கிக்கொண்டே பறந்து வரும். அப் பாதையைப் படம் வரைந்தால் ஒரு சுருள் கம்பி போல இருக்கும். இவ்வாறு பூமியை நெருங்கிவந்து அடர்த்திமிகுந்த காற்றை ವಾಣಿ செல்லும்போது வெப்பம் மிகுந்து எரிந்து சாம்பலாகி டும். 19. சந்திரமண்டலத்துக்கே செல்ல வல்ல செயற்கைச் சந்திரனை இயக்கியவர்கள் யார் ? அவர்கள் முயற்சி என்னவாயிற்று ? செயற்கைச் சந்திரனைச் சந்திரமண்டலத்துக்கே இயக்கியவர் கள் அமெரிக்க விஞ்ஞானிகள். அவர்கள் முயற்சியால் அதை ஏற்றிச் சென்ற ராக்கெட் 80,000 மைல் உயரம் சென்று அதி லுள்ள கருவிகளில் ஏற்பட்ட கோளாறுகளால் பூமியை நோக்கித் திரும்பிவந்து காற்று மண்டலத்தை யடைந்து எரிந்துவிட்டது. 20. செயற்கைச் சந்திரன் இயற்கைச் சந்திரனை அடை வதில் வெற்றிகண்டால் விளையும் நன்மைகள் யாவை? செயற்கைச் சந்திரன் இயற்கைச் சந்திரனை வட்டமிடும்போது பூமியிலிருந்து நமக்குத் தெரியாத சந்திரனின் எதிர்ப்புறத்தைப் படம் பிடித்து, வானெலி அலைகளாக மாற்றி, அதிலுள்ள கருவிகள் அனுப்பும். அவ்வலைகளைத் திரும்பவும் படங்களாக மாற்றி ஆராயலாம். அடுத்தபடியாக மனிதனையே ஏற்றிச்செல்லக்கூடிய வாகனங் களே அமைத்துச் சந்திரமண்டலத்திற்குப் போய்வரும்படியான வசதிகள் ஏற்படலாம். -
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/206
தோற்றம்