之どs முற்காலச் செய்யுள் புலர்குரல்-வினைத்தொகை. நின்ருேற்கண்டோர்-இரண்டாம் வேற்றுமைத்தொகை. தில்-அசை நிலை. தோழி-அண்மைவிளி. ஒரியான்-ஒர்-யான். 'தன்னெழிமெய்ம் முன் யவ்வரின் இக ரம் துன்னும் என்ற விதிப்படி வந்தது. கொல்-அசைகிலே. இ. திருமுருகாற்றுப்படை அருவி ஆற்றுப்படை என்பது பரிசில் பெற்று வந்த ஒருவன் பெற விரும்பும் ஒருவனுக்கு வழிகளைக் கூறி அவனே ஆற்றுப் படுத்துவது. புலவரை ஆற்றுப் படுத்துவது புலவராற்றுப் படை எனப்படும். ஆளுல் இங்கே முருகாற்றுப்படை என்பது முருகனே ஆற்றுப்படுத் துவது என்று பொருள் படாது முருகனிடம் மற்ருெருவனே ஆற்றுப் படுத்துவது என்று பொருள்படும். வீடு பெறுதற்குத் தகுதியுடை யான் ஒருவனே, வீடு பெற்ரு ளுெருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது என்று பொருள் கொள்க. இது பத்துப்பாட்டுள் ஒன்று. பத்துப் பாட்டு என்பது பத்துப் பெரும் பாட்டுக்களைக் கொண்ட ஒரு சங்க நூல். பலரால் பாடப் பட்டுத் தொகுக்கப் பட்டது. திருமுருகாற்றுப் படையைப் பாடி பவர் நக்கீரர். ஆசிரியரைப்பற்றி : நக்கீரர் மதுரைக் கணக்காயனர் மகளுர் நக்கீரஞர் என்று கூறப் பெறுவார். இவருடைய இயற்பெயர் கீரனர் என்பதாகும். * திருமுருகாற்றுப் படையும் நெடுநல் வாடையும் இவர் இயற் றியவை. இவை தவிர நற்றினை குறுந்தொகை, அகநானுாறு முத விய நூல்களிலும் இவருடைய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பது பெயருக்கு முன் னுள்ள் அடைமொழியால் விளங்கும். இவரைப் பற்றிப் பலவாறு கதைகள் கூறுவர். இக்கதைகட்குரிய நக்கீரரும் சங்கப் புலவராகிய நக்கீரரும் வேறு வேறு என்பர் ஆராய்ச்சியாளர். அக்கதைகளின் வாயிலாக இவர் தமிழ்மொழிப் பற்றும், அஞ்சாது வாதிடும் நெஞ் சுரமும், நுண்மாண் நுழை புலமும் உடையவர் என்பதை அறிகிருேம்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/230
தோற்றம்